தலைசிறந்த ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜாவை பிசிசிஐ அவமதிக்கிறது - மைக்கேல் வாகன் விளாசல்

தலைசிறந்த ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜாவை பிசிசிஐ அவமதிக்கிறது - மைக்கேல் வாகன் விளாசல்

மைக்கேல் வாகன் - ரவீந்திரா ஜடேஜா

பிசிசிஐ வீரர்களுக்கான ஒப்பந்த பட்டியலில் 'ஏ' பிளஸ் கிரேடில் ரவீந்திர ஜடேஜாவை சேர்க்காதது, அவரை அவமதிக்கும் செயல் என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் சாடியுள்ளார்.

  • Share this:
    டெஸ்ட், ஒருநாள் கிரிக்கெட், டி-20 என மூன்றுவிதமான போட்டிகளில் முத்திரை பதிக்கும் வீரர்களை 'ஏ' பிளஸ் கிரேடில் சேர்த்து அவர்களுக்கு ஆண்டுக்கு தலா 7 கோடி ரூபாய் பிசிசிஐ வழங்குகிறது. நடப்பு ஆண்டுக்கான பட்டியலில் கோலி, ரோஹித், பும்ரா மட்டுமே முதல் கிரேடில் இடம்பெற்றனர். ஆனால், ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவை, இரண்டாவது உள்ள 'ஏ' கிரேடில் தான் பிசிசிஐ தொடர்ந்து வைத்துள்ளது.

    கேப்டன் கோலிக்கு பக்கபலமாக இருக்கும் இவரை, 'ஏ' பிளஸ் கிரேடுக்கு உயர்த்தாதது வெட்கப்படும் செயல் என்று வாகன் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அத்துடன், பிசிசிஐ-யின் இந்த முடிவை சுட்டிக்காட்டிவதில் தனக்கு எந்தவொரு தயக்கமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.



    அக்டோபர் 2020 முதல் செப்டம்பர் 2021 வரையிலான நடப்பு ஆண்டுக்கான புதுப்பிக்கப்பட்ட பட்டியல் வெளியாகி உள்ளது. பிசிசிஐ ஒப்பந்த வீரர்களில் கிரேட் ஏ+ இடம்பெறும் வீரர்களுக்கு ஏழு கோடி ரூபாயும், ஏ, பி மற்றும் சி பிரிவு வீரர்களுக்கு முறையே ஐந்து, மூன்று மற்றும் ஒரு கோடி ரூபாயும் ஊதியமாக வழங்கப்படுகிறது.

    இதில் ஏ+ கிரேடில் இடம்பிடிக்க வேண்டுமானல் மூன்று வடிவிலான போட்டிகளிலும் வீரர்கள் விளையாட வேண்டும். அதன்படி ஏ+ கிரேடில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, ரோஹித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் மட்டுமே இடம்பெற்றுள்ளனர்.

    ஏ கிரேடில் ரவிசந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, புஜாரா, ரஹானே, ஷிகார் தவன், கே.எல்.ராகுல், முகமது ஷமி, இஷாந்த் சர்மா, ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட 10 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

    பி கிரேடில் விருதமான் சஹா, உமேஷ் யாதவ், புவனேஸ்வர் குமார், சர்துல் தாகூர், மயங்க் அகர்வால் உள்ளிட்ட 5 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

    சி கிரேடில் குல்தீப் யாதவ், நவ்தீப் சைனி, தீபக் சஹர், சுப்மன் கில், ஹனும விஹாரி, அக்ஷர் படேல், ஷ்ரேயாஸ் ஐயர், வாஷிங்டன் சுந்தர், சாஹல், முகமது சிராஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளர்.
    Published by:Vijay R
    First published: