பெண் பயணிகளுடன் வாக்குவாதம்! விமானத்திலிருந்து இறக்கிவிடப்பட்ட பிரபல ஆஸ்திரேலிய வீரர்

என்னால் சகப்பயணிகளுக்கு தொந்தரவு ஏற்பட்டு இருந்தால் மன்னிப்பு கோருவதாக மைக்கேல் ஸ்லாட்டர் தெரிவித்துள்ளார்.

Vijay R | news18
Updated: May 21, 2019, 11:21 PM IST
பெண் பயணிகளுடன் வாக்குவாதம்! விமானத்திலிருந்து இறக்கிவிடப்பட்ட பிரபல ஆஸ்திரேலிய வீரர்
மைக்கேல் ஸ்லாட்டர்
Vijay R | news18
Updated: May 21, 2019, 11:21 PM IST
ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் ஸ்லாட்டர் விமானத்திலிருந்து இறக்கிவிடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிட்னியிலிருந்து வாகா வாகாவிற்கு செல்லும் விமானத்தில் ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கெல் ஸ்லாட்டர் புறப்பட்டு உள்ளார். விமானத்தின் சகப் பெண் பயணிகளிடம் அவர் கடும் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டடுள்ளார்.

வாக்குவாதம் முற்றிய நிலையில் விமானத்தின் கழிவறைக்கு சென்று அவர் நீண்ட நேரமாகியும் வெளிவரவில்லை. விமான ஊழியர்கள் கழிவறையை விட்டு வெளியேற சொல்லியும் அவர் மறுத்துவிட்டார். இதையடுத்து போலீசாரை அழைத்து அவரை வெளியே வரவைத்தனர்.

இந்த சம்பவத்தால் விமானம் 30 நிமிடங்கள் புறப்பட தாமதமானது. இதை தொடர்ந்து விமானத்தில் ஸ்லாட்டர் பயணிக்க ஊழியர்கள் மறுத்ததால் விமானத்திலிருந்து அவர் கீழே இறக்கிவிடப்பட்டார்.

இது தொடர்பாக ஸ்லோட்டர் கூறுகையில், என்னால் சகப்பயணிகளுக்கு தொந்தரவு ஏற்பட்டு இருந்தால் மன்னிப்பு கோருவதாக தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் ஸ்லாட்டர் 1993-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டுவரை ஆஸ்திரேலிய அணிக்காக ஆடியவர். 74 டெஸ்ட் போட்டிகளில் ஆடி இருக்கிறார்.

ஐபிஎல் போட்டிகளில் வர்ணனையாளராக இருந்த ஸ்லாட்டர் இங்கிலாந்தில் நடக்க உள்ள உலக கோப்பைக்கான போட்டிகளிலும் வர்ணனையாளராகவும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடதக்கது.
First published: May 21, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...