HOME»NEWS»SPORTS»cricket michael clarke says australia were scared to lose aru

முதல் பந்திலிருந்தே ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வி பயம் இருந்தது - சாடிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க்

1988ம் ஆண்டுக்கு பிறகு இந்த மைதானத்தில் தோல்வியையே சந்திக்காத பெருமை கொண்ட ஆஸ்திரேலிய அணியை, விராட் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வின், என இந்திய அணியின் முன்னணி 8 வீரர்கள் இல்லாத கத்துக்குட்டியாக களமிறங்கிய இந்திய அணி வரலாற்று வெற்றியை பதிவு செய்து தொடரை கைப்பற்றியிருக்கிறது.

முதல் பந்திலிருந்தே ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வி பயம் இருந்தது - சாடிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க்
1988ம் ஆண்டுக்கு பிறகு இந்த மைதானத்தில் தோல்வியையே சந்திக்காத பெருமை கொண்ட ஆஸ்திரேலிய அணியை, விராட் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வின், என இந்திய அணியின் முன்னணி 8 வீரர்கள் இல்லாத கத்துக்குட்டியாக களமிறங்கிய இந்திய அணி வரலாற்று வெற்றியை பதிவு செய்து தொடரை கைப்பற்றியிருக்கிறது.
  • Share this:

வெற்றிக்காக ஆக்ரோஷமாக விளையாடாமல் இயல்புக்கு மாறாக தோல்வி பயத்துடனேயே ஆஸ்திரேலிய அணி விளையாடியதை போன்று இருந்ததாக இந்திய அணியுடனான தோல்வி குறித்து அந்த அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் 2-1 என்ற கணக்கில் பார்டர் - கவாஸ்கர் தொடரை வென்று சரித்திர வெற்றியை பதிவு செய்தது. முன்னதாக நடைபெற்ற டி20 தொடரையும் இந்திய அணியே கைப்பற்றிய நிலையில் ஒரு நாள் தொடரில் மட்டும் ஆஸி வெற்றி பெற்றது.

டிசம்பர் மாதம் அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் 36 ரன்களுக்குள் சுருண்டு வரலாற்று தோல்வியை பதிவு செய்த இந்திய அணி தோல்வியில் இருந்து ஃபீனிக்ஸ் பறவையாக மீண்டு எழுந்து மெல்போர்னில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றது. சிட்னியில் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டியின் போது மைதானத்தில் ரசிகர்களால் இனரீதியிலான இழிவுகளை சந்தித்த இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி டிராவில் முடித்தாலும், வெற்றியை நிர்ணயிக்கும் 4வது போட்டியில் பலம் வாய்ந்த ஆஸி அணியை பிரிஸ்பேனில் உள்ள காபா மைதானத்தில் சந்தித்தது.





1988ம் ஆண்டுக்கு பிறகு இந்த மைதானத்தில் தோல்வியையே சந்திக்காத பெருமை கொண்ட ஆஸ்திரேலிய அணியை, விராட் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வின், என இந்திய அணியின் முன்னணி 8 வீரர்கள் இல்லாத கத்துக்குட்டியாக களமிறங்கிய இந்திய அணி வரலாற்று வெற்றியை பதிவு செய்து தொடரை கைப்பற்றியிருக்கிறது. இந்த வெற்றியின் மூலம் உலக கிரிக்கெட் ரசிகர்களை தன்வசப்படுத்தியிருக்கும் இந்திய இளம்படை வாழ்த்து மழையில் நனைந்து வருகிறது.

இதனிடையே தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆஸி அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க், ஆஸ்திரேலிய அணியின் தோல்வி குறித்து சில அதிரடி கருத்துகளை தெரிவித்திருக்கிறார்.

“கேப்டன் விராட் கோலி இல்லாத நிலையில், அந்த அணியின் முன்னணி வீரர்கள் 7 பேர் காயம் காரணமாக வெளியேறிய சூழலில் கத்துக்குட்டி வீரர்களுடன் களமிறங்கி
டிம் பெய்ன் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியிருப்பது பிரம்மிக்கத்தக்க ஒன்றாகும். அசாதாரணமானது என்றால் கூட ஒரு குறையாகவே இருக்கும் அந்த வகையிலான ஒரு குணத்தை இந்திய அணி வெளிப்படுத்தியிருக்கிறது.

36 ரன்களில் சுருண்டு வரலாற்று தோல்வியை பதிவு செய்த போதும் தோல்வியில் இருந்து மீண்டு வந்து அடுத்த டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற விதமும் மிரட்சியானது” என்றார் கிளார்க்

பலம் குன்றிய இந்திய அணியை எதிர்த்து ஆஸி அணி எதிர்மறையுடன் இப்போட்டியில் விளையாடியது. இயல்பாக ஆக்ரோஷத்துடன் விளையாடாமல், முதல் பந்து முதலே தோல்வி பயத்துடன் விளையாடியது என்றார்.

இந்த தோல்வியின் மூலம் சொந்த மண்ணில் இந்திய அணிக்கு எதிராக 2 டெஸ்ட் தொடர் தோல்விகளை பதிவு செய்த கேப்டன் என்ற அவப்பெயருக்கு கேப்டன் டிம் பெய்ன் ஆளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Arun
First published: