ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

VIDEO: மிதாலிக்கு பந்துவீசிய ஆஸ்திரேலிய ஆடவர் அணியின் முன்னாள் கேப்டன்!

VIDEO: மிதாலிக்கு பந்துவீசிய ஆஸ்திரேலிய ஆடவர் அணியின் முன்னாள் கேப்டன்!

உள்ளரங்க மைதானத்தில் கிளார்க் - மிதாலி ராஜ். (Twitter)

உள்ளரங்க மைதானத்தில் கிளார்க் - மிதாலி ராஜ். (Twitter)

Aussie's Former Captain Bowl To #MithaliRaj | உலகக்கோப்பை தொடருக்காக இந்திய அணி வீராங்கனைகள் தீவிர பயிற்சி செய்து வருகின்றனர்.

  • News18
  • 2 minute read
  • Last Updated :

இந்திய அணியின் கேப்டன் ‘லேடி சச்சின்’ மிதாலி ராஜுக்கு ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் பந்துவீசிய வீடியோ வைரலாகி வருகிறது.

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி முன்னணி அணிகளில் ஒன்றாக இருந்து வருகிறது. ஒரு நாள் அணியின் கேப்டனாக ‘லேடி சச்சின்’ என கிரிக்கெட் ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் மிதாலி ராஜ் இருக்கிறார்.

Mithali Raj
மிதாலி ராஜ் (Getty)

மிதாலி ராஜ், சர்வதேச கிரிக்கெட் அரங்கில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். தற்போது, மகளிர் கிரிக்கெட் அணி 50 ஓவர்கள் உலகக்கோப்பையை எதிர்நோக்கி உள்ளது. இங்கிலாந்தில் வரும் 30-ம் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ளது.

இதற்காக இந்திய அணி வீராங்கனைகள் தீவிர பயிற்சி செய்து வருகின்றனர். அதேபோல், மகளிர் அணியின் கேப்டன் மிதாலி ராஜூம் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

இதன் ஒரு பகுதியாக, உள்ளரங்க மைதானத்தில் பயிற்சி செய்த மிதாலிக்கு, ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் பந்துவீசியுள்ளார். இந்த வீடியோ ட்விட்டரில் வெளியாகியுள்ளது.

இந்த வீடியோவுக்கு பதிலளித்த கிளார்க், “மகளிர் கிரிக்கெட்டின் சூப்பர்ஸ்டார், என்ன ஒரு வீராங்கனை, என்ன ஒரு மனிதர்” என மிதாலியை புகழ்ந்து பதிவிட்டுள்ளார்.

இதெல்லாம் ஒரு பிட்ச்சா? டெல்லி ஆடுகளத்தை விளாசிய பாண்டிங்!

ஃபோட்டோவை கிழித்த ஆண்டர்சன்... பதிலடி கொடுத்த அஸ்வின்!

இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு தடைவிதிக்கக் கோரிய மனு தள்ளுபடி!

Also Watch...


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


First published:

Tags: Indian women cricket, Mithali Raj