ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் அவரது மனைவி கைலி விவகாரத்து செய்ய உள்ளதாக அறிவித்துள்ளனர்.
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் தலைமையில் அந்த அணி உலகக் கோப்பையை வென்றுள்ளது. மைக்கேல் கிளார்க்கும், கைலிக்கும் கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
கைலி மாடலாகவும், தொலைக்காட்சி தொகுப்பாளினியாகவும் இருந்துள்ளார். இவர்களுக்கு 4 வயதில் கெல்சி லீ என்ற மகளும் உள்ளார். இந்நிலையில் இவர்களுக்குள் ஏற்பட்ட பிரிவின் காரணமாக பிரிந்து வாழ இவர்கள் முடிவெடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக இவர்கள் விடுத்துள்ள அறிக்கையில், “நாங்கள் சேர்ந்து வாழ்ந்த நாட்களில் குடும்பத்தினரிடமிருந்தும் நண்பர்களிடமிருந்தும் அருமையான ஆதரவை நாங்கள் ஒப்பு கொள்கிறோம். தற்போது இருவரும் பிரிந்து வாழ முடிவெடுத்துள்ளோம. இதன் மூலம் எங்கள் வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை நிர்வாகிக்க முடியும்“ என்றுள்ளனர்.
மைக்கேல் கிளார்க் - கைலி இருவரும் 5 மாதங்களுக்கு முன்பே பிரிந்து வாழும் முடிவை எடுத்துள்ளனர். இருவரும் தங்கள் வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை நிர்வாகிக்க தனியுரிமை கோரியுள்ளனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.