தோனியின் தொடர் வெற்றிக்கு இதுதான் காரணம்... ரசிகர்கள் நெகிழ்ச்சி!

#MIvsCSK: #MSDhoni take #specialphoto with ‘sons of soil’ | மைதானத்தில் திறமையைக் காட்டுவதை தாண்டி தோனியின் வெற்றிக்கு மேலும் சில முக்கியமான காரணங்களும் இருக்கின்றன.

news18
Updated: April 3, 2019, 7:07 PM IST
தோனியின் தொடர் வெற்றிக்கு இதுதான் காரணம்... ரசிகர்கள் நெகிழ்ச்சி!
ரசிகர்களை நோக்கி கையசைக்கும் தோனி. (CSK)
news18
Updated: April 3, 2019, 7:07 PM IST
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் வெற்றிக்கான காரணத்தை அறிந்த ரசிகர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு, இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்திய கிரிக்கெட் அணிக்கு 3 விதமான ஐ.சி.சி கோப்பைகளை வென்று கொடுத்த வெற்றிக்கரமான கேப்டன் என்ற பெருமை தோனியையே சேரும்.

2008-ம் ஆண்டு ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடர் ஆரம்பிக்கப்பட்டது முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தோனி இருக்கிறார். ராஞ்சிக்கு அடுத்தபடியாக அவரின் சொந்த ஊராக சென்னை பார்க்கப்படுகிறது. அவருக்கு அவ்வளவு ரசிகர்கள் சென்னையில் உள்ளனர்.

Dhoni vs Fan, தோனியைப் பிடித்த ரசிகர்
தோனியை விரட்டிப் பிடித்த ரசிகர். (CSK)


மைதானத்தில் திறமையைக் காட்டுவதை தாண்டி தோனியின் வெற்றிக்கு மேலும் சில முக்கியமான காரணங்களும் இருக்கின்றன. அதில், முதலாவது அவரது எளிமை, அடுத்து அமைதி. களத்தில் எவ்வளவு அழுத்தம் இருந்தாலும் மிகவும் அமைதியாக இருந்து சாதித்துக்காட்டுவது தோனியின் வழக்கம்.

அடுத்து அவரது எளிமை. ரசிகர்களிடம் தோனி எதார்த்தமாக நடந்துகொள்வது. அதனாலேயே பல முறை ரசிகர்கள் பாதுகாப்பை மீறி தோனியின் காலில் விழுவது நிகழ்ந்துள்ளது. அவரின் எளிமைக்கு மற்றொரு உதாரணம் வெளியாகியுள்ளது. வான்கடே மைதானத்தை பராமரிக்கும் ஊழியர்களுடன் தல தோனி புகைப்படம் எடுத்துக்கொண்டார்.அவர்களுக்கு இது மிகப்பெரிய உற்சாகத்தை அளித்திருக்கும். தோனியுடன் ஹர்பஜன் சிங், ரெய்னா, ஜாகிர் கான் ஆகியோரும் உடன் இருந்தனர். இந்த புகைப்படத்தைப் பார்த்து ரசிகர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.
Also see:

First published: April 3, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...