இன்று இந்தியா - பாகிஸ்தான் போட்டி போல இருக்கும்: சொன்னது யார் இவர்தான்!

#MIvsCSK like #IndiavsPakistan game, says former #MumbaiIndians Player | மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு மும்பையில் நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இன்று இந்தியா - பாகிஸ்தான் போட்டி போல இருக்கும்: சொன்னது யார் இவர்தான்!
சென்னை - மும்பை அணிகள். (Twitter)
  • News18
  • Last Updated: April 3, 2019, 6:53 PM IST
  • Share this:
வான்கடே மைதானத்தில் இன்று நடைபெறும் சென்னை - மும்பை இடையிலான ஐ.பி.எல் போட்டி இந்தியா - பாகிஸ்தான் மோதலைப் போல் பரபரப்பாக இருக்கும் என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். 

ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடரின் 12-வது சீசன் இந்தியாவில் களைகட்டி வருகிறது. நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான் விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.

மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு  நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, 3-ல் விளையாடி ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அந்த அணி புள்ளிப்பட்டியலில் 2 புள்ளிகளுடன் கடைசிக்கு முந்தைய இடத்தில் உள்ளது.


MI VS CSK Preview
தோனி மற்றும் ரோகித் சர்மா. (BCCI)


இந்தப் போட்டி, இந்தியா - பாகிஸ்தான் மோதலைப் போல் பரபரப்பாக இருக்கும் என தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருப்பவரும், மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் வீரருமான ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “மும்பை இந்தியன்ஸ் அணி மிகவும் பிரபலமான அணி. இந்தப் போட்டி இந்தியா - பாகிஸ்தான் மோதலைப் போல் பரபரப்பாக இருக்கும். நாங்கள் சென்னை அணியை வீழ்த்த வேண்டும் என நினைப்போம். அவர்கள் எங்களை வீழ்த்த நினைப்பார்கள். நான் சென்னை அணியின் இணைந்ததும் அது மாறிவிட்டது. இப்போது மும்பையை வீழ்த்த வேண்டும்” என கூறினார்.


ஐ.பி.எல் தொடரில் இரு அணிகளும் 24 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில், மும்பை அணி 13 போட்டிகளிலும், சென்னை அணி 11 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. இதனால், இன்றைய போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்கப்படுகிறது.

ஐ.பி.எல் போட்டியில் சூதாட்டம்... இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் கைது!

மறக்க முடியுமா இந்நாளை! ரசிகர்களின் 28 ஆண்டுகால ஏக்கத்தை தணித்த 'தல' தோனியின் சிக்ஸர்

Also Watch...


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 3, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்