VIDEO: தோனிக்கே மான்கட் அவுட்டா? பல்பு வாங்கிய பாண்டியா!

தோனி அவுட்டாக்க முயற்சித்த க்ருனல் பாண்டியா. (BCCI)

#MIvsCSK: #KrunalPandya tries to ‘#Mankad’ #MSDhoni | சென்னை அணியின் தொடர் வெற்றிக்கு மும்பை முற்றுப்புள்ளி வைத்தது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    மும்பை அணிக்கு எதிரான போட்டியின்போது தோனியை ‘மான்கட்’ அவுட் செய்ய முயற்சித்த க்ருனல் பாண்டியா ஏமாற்றம் அடைந்தார்.

    ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடர் இந்தியாவில் களைகட்டி வருகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடந்த போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

    முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக, சூர்யகுமார் யாதவ் 59 ரன்களும், க்ருனல் பாண்டியா 42 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். கடைசி கட்டத்தில் அதிரடியாக விளையாடிய ஹர்திக் பாண்டியா 8 பந்துகளில் 25 ரன்கள் விளாசினார்.



    அடுத்துக் களமிறங்கிய சென்னை அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 133 ரன்கள் மட்டுமே எடுத்து 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. சென்னை அணியின் தொடர் வெற்றிக்கு மும்பை முற்றுப்புள்ளி வைத்தது.

    சென்னை அணியின் பேட்டிங்கின்போது க்ருனல் பாண்டியா வீசிய 14-வது ஓவரை ஜாதவ் எதிர்கொள்ள மறுமுனையில் தோனி இருந்தார். அப்போது, ஒரு பந்தில் தோனி கிரீஸுக்கு வெளியே செல்வதாக நினைத்துக்கொண்டு ‘மான்கட்’ அவுட் செய்ய க்ருனல் பாண்டியா முயற்சித்தார். ஆனால், தோனி வெளியே சென்றாலும் அவர் பேட் கிரீஸுக்கு உள்ளே இருந்ததால் ஏமாற்றம் அடைந்தார்.



    இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

    இரட்டைப் பதவி ஆதாயம்: சவுரவ் கங்குலிக்கு பிசிசிஐ நோட்டீஸ்!

    தொடக்கவீரர்கள் சொதப்பல்! மும்பையிடம் வீழ்ந்தது சென்னை..




    தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.














    விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



    Published by:Murugesan L
    First published: