#MIvKXIP | ராகுல் சதம், கெயில் அரைச்சதம்... மும்பையை பதம் பார்த்த பஞ்சாப்...!

புள்ளிப்பட்டியலில் பஞ்சாப் அணி 4 வெற்றி, 2 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளது.

Vijay R | news18
Updated: April 10, 2019, 9:55 PM IST
#MIvKXIP |  ராகுல் சதம், கெயில் அரைச்சதம்... மும்பையை பதம் பார்த்த பஞ்சாப்...!
கிறிஸ் கெயில் - கே.எல்.ராகுல்
Vijay R | news18
Updated: April 10, 2019, 9:55 PM IST
மும்பை அணிக்கு எதிரான போட்டியில் கெயில், ராகுல் அதிரடி ஆட்டத்தால் பஞ்சாப் அணி 197 ரன்கள் குவித்தது.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐ.பி.எல். போட்டியின் 24-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின.

புள்ளிப்பட்டியலில், பஞ்சாப் அணி 4 வெற்றி, 2 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளது. மும்பை அணி 3 வெற்றி, 2 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று 5-வது இடத்தில் உள்ளது.

டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பொல்லார்டு முதலில் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய ராகுல், கெயில் ஜோடி மும்பை அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர்.

கெயில் 36 பந்துகளில் 7 சிக்சர்கள், 3 பவுண்டரிகள் விளாசி 63 ரன்கள் எடுத்து அவுட்டானார். அவரை தொடர்ந்து வந்த மும்பை அணியின் வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினாலும், மறுமுனையில் ராகுல் மும்பை அணியின் பந்துவீச்சை சிதறடித்து சதம் அடித்தார்.

இறுதியில் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 197 ரன்கள் குவித்தது. ராகுல் 64 பந்துகளில் 100 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதனை தொடர்ந்து 198 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி விளையாடி வருகிறது.
Loading...
Click to Check Live Scores 

 
First published: April 10, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...