ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

எம்.ஐ. எமிரேட்ஸ் மற்றும் எம்.ஐ கேப்டவுன் அணிக்கு புதிய கேப்டன்கள் அறிவிப்பு

எம்.ஐ. எமிரேட்ஸ் மற்றும் எம்.ஐ கேப்டவுன் அணிக்கு புதிய கேப்டன்கள் அறிவிப்பு

பொலார்ட் - ரஷித் கான்

பொலார்ட் - ரஷித் கான்

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று கிரிக்கெட் தொடருக்கு புதிய கேப்டன்களை எம்ஐ நிர்வாகம் அறிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Mumbai, India

யுஏஇ-யில் நடைபெறும் தனியார் டி20 லீக்கில் எம்.ஐ.எமிரேட்ஸ் என்ற அணியையும் தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் டி20 தொடரில் எம்.ஐ. கேப்டவுன் அணியையும் ரிலையன்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.

ஐக்கிய அரபு எமீரெட்ஸில் அடுத்தாண்டு ஜனவரி மாதம் இண்டர்நேஷனல் லீக் டி20 தொடர் நடைபெறவுள்ளது. இதில் களமிறங்கும் எம்.ஐ.எமிரேட்ஸ் அணியில் மேற்கு இந்திய தீவுகள் வீரர்கள் கிரன் பொலார்ட், டுவைன் பிராவோ , நில்கோலஸ் பூரான் நியூசிலாந்து வீரர் டிரண்ட் போல்ட், தென் ஆப்பிரிக்கா முன்னாள் வீரர் இம்ரான் தாஹீர் உள்ளிட்டோர் விளையாட உள்ளனர். இந்த நிலையில் அடுத்தாண்டு நடைபெறும் இண்டர்நேஷனல் லீக் டி20 தொடரில் எம்.ஐ. எமிரேட்ஸ் அணிக்கு கிரன் பொலார்ட் கேப்டனாக செயல்படுவார் என ஆகாஷ் அம்பானி அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க: பிராவோவுக்கு முக்கிய பதவி.. கவுரவித்த சிஎஸ்கே நிர்வாகம்

மேலும் 2023 ஜனவரி மாதம் தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் டி20 தொடரில் விளையாட உள்ள எம்.ஐ. கேப்டவுன் அணிக்கு ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து குறிப்பிட்டுள்ள ஆகாஷ் அம்பானி,  இரு அணிகளுக்கும் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ள ரஷித் கான் மற்றும் போலர்டுக்கு அதிக அனுபவங்கள் இருக்கும் கேப்டனாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

First published:

Tags: Mumbai Indians, Pollard, Rashid Khan, South Africa, UAE