Home » News » Sports » CRICKET MENTALLY TORTURED PAKISTAN PACER MOHAMMAD AMIR QUITS INTERNATIONAL CRICKET VJR

மனரீதியாக சித்திரவதை அனுபவித்தேன்... பாக். கிரிக்கெட் வீரர் திடீர் ஓய்வு அறிவிப்பு

கடந்த வருடம் நடைபெற்ற உலகக்கோப்பையின் போது முகமது அமிரி 17 விக்கெட்களை வீழ்த்தினார்.

மனரீதியாக சித்திரவதை அனுபவித்தேன்... பாக். கிரிக்கெட் வீரர் திடீர் ஓய்வு அறிவிப்பு
முகமது அமிர்
  • Share this:
மனரீதியாக சித்திவதை அனுபவித்ததால் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமிர் அறிவித்துள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கடந்த 2010-ம் ஆண்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அந்த சுற்றுப்பயணத்தின் போது சல்மான் பட், முகமது ஆசிப், முகமது அமிர் ஆகியோர் ஸ்பாட் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டனர். பின்னர் இவர்களுக்கு அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டது.

பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமிர் 5 ஆண்டுக்காலம் தடை முடிந்த பின் 2016-ம் ஆண்டு அணிக்கு திரும்பினார். கடந்த வருடம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு அறிவித்தார். வெள்ளை பந்து கிரிக்கெட் போட்டிகளில் அதிகம் கவனம் செலுத்த விரும்புவதால் இந்த முடிவை எடுத்ததாக அறிவித்தார்.


இந்நிலையில் தற்போதைய கிரிக்கெட் நிர்வாகத்தின் கீழ் என்னால் விளையாட முடியாது என முகமது அமிர் ஓய்வை அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எனக்கு மனரீதியாக சித்திரவதை கொடுக்கிறார்கள். இதை என்னால் அனுபவிக்க முடியாது. பல வருடங்களாக இவர்களின் சித்திரவதையை அனுபவித்துவிட்டேன்.

ஒவ்வொரு மாதமும் யாரவது ஒருவர் என்னிடம் நம்மை பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் புறகணித்துவிட்டார்கள் என்று கூறுகின்றனர். நான் பாகிஸ்தான் திரும்பிய உடன் இது தொடர்பாக விளக்கமாக பேச உள்ளேன்“ என்றுள்ளார்.

கடந்த வருடம் நடைபெற்ற உலகக்கோப்பையின் போது முகமது அமிரி 17 விக்கெட்களை வீழ்த்தினார். அமிர் 36 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 119 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார். மேலும் 61 ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் 81 விக்கெட்களையும் 50 டி20 போட்டிகளில் விளையாடி 59 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
First published: December 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories