முகப்பு /செய்தி /விளையாட்டு / ‘மனதளவில் மிகவும் பலவீனமானவர்கள்’ – ஆஸ்திரேலிய வீரர்களை சாடும் ஹர்பஜன் சிங்

‘மனதளவில் மிகவும் பலவீனமானவர்கள்’ – ஆஸ்திரேலிய வீரர்களை சாடும் ஹர்பஜன் சிங்

ஹர்பஜன் சிங்

ஹர்பஜன் சிங்

வழக்கமாக ஆஸ்திரேலிய அணி ஒரு நாட்டிற்கு சென்று விளையாடவுள்ளது என்றால், அதற்கான திட்டங்களை முன்கூட்டியே சிறப்பாக வகுத்திருக்கும்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர்கள் மனதளவில் மிகவும் பலவீனமானவர்கள் என்று இந்திய அணியின் முன்னாள் அல்ரவுண்டர் ஹர்பஜன் சிங் விமர்சித்துள்ளார். உலகில் நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக இருக்கும் ஆஸ்திரேலியா, இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 4 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியாவை இந்திய வென்று 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது.

டெஸ்ட் போட்டிகளில் நம்பர் ஒன் அணியான ஆஸ்திரேலியா படுதோல்வியை சந்தித்து வருவது கடும் விமர்சனங்களை கிளப்பியுள்ளது. குறிப்பாக அந்த அணியின் முன்னாள் வீரர்கள் அணியை கடுமையாக சாடி வருகின்றனர். இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் மோசமான ஆட்டம் குறித்து இந்திய அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் ஹர்பஜன் சிங் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது- இப்போதுள்ள ஆஸ்திரேலிய அணியை முன்பிருந்த அணியுடன் ஒப்பிடக் கூடாது. என்னைப் பொருத்தளவில் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி மிகவும் பலவீனமாக உள்ளது.

வழக்கமாக ஆஸ்திரேலிய அணி ஒரு நாட்டிற்கு சென்று விளையாடவுள்ளது என்றால், அதற்கான திட்டங்களை முன்கூட்டியே சிறப்பாக வகுத்திருக்கும். மற்ற அணிகளை விடவும் போட்டியை மிகவும் நன்றாக ஆஸ்திரேலிய அணி வீரர்கள் புரிந்து வைத்திருப்பார்கள். அதனால்தான் இந்திய மண்ணில் மற்ற அணிகளை விடவும் ஆஸ்திரேலியா கடந்த காலங்களில் நேர்த்தியாக விளையாடியுள்ளது. ஆனால் இப்போது விளையாடிக் கொண்டிருக்கும் ஆஸ்திரேலிய அணிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவர்களிடம் எந்த திட்டமும் காணப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார். இந்நிலையில் இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இந்தூரில் இன்று தொடங்குகிறது.

First published:

Tags: Cricket