இங்கிலாந்துக்கு அடுத்து இந்தியாதான்.. முதல் டெஸ்ட்டை இழந்த பிறகு வென்றது எப்போது?- சுவையான தகவல்கள்

இங்கிலாந்துக்கு அடுத்து இந்தியாதான்.. முதல் டெஸ்ட்டை இழந்த பிறகு வென்றது எப்போது?- சுவையான தகவல்கள்

ரஹானே-கில்

டாஸ் தோற்ற பிறகு இந்தியா டெஸ்ட்டில் வெல்வது இதற்கு முன்பாக அந்த புகழ்பெற்ற 2003ம் ஆண்டு அடிலெய்ட் டெஸ்ட், பிறகு 2010-ல் இலங்கையில், இப்போது மெல்போர்னில் டாஸ் தோற்று டெஸ்ட்டை வென்றுள்ளது.

 • Last Updated :
 • Share this:
  தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா என்ற SENA நாடுகள் என அழைக்கப்படும் நாடுகளில் மெல்போர்ன் தான் இந்தியாவுக்கு மெல்போர்ன் தான் இந்தியாவுக்கு ராசியான மைதானம்.

  மெல்போர்னில் 1977-78 தொடர், 1980-81 தொடர், 2018-19 தொடர் இப்போது 2020 தொடர் ஆகியவற்றில் வென்று 4 வெற்றிகளைப் பெற்றுள்ளது. வெளிநாடுகளில் இந்தியாவின் வெற்றிகர மைதானம் மெல்போர்ன் தான். இங்கிலாந்து இந்தியாவைத் தவிர மெல்போர்னில் 3 போட்டிகளுக்கும் மேல் யாரும் வென்றதில்லை.

  முன்னதாக இந்திய அணி ட்ரினிடாட், குவீன்ஸ்பார்க் ஓவரில் 3 வெற்றிகளையும் ஜமைக்கா, சபைனா பார்க்கில் 3 வெற்றிகளையும் கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் 3 வெற்றியையும் பெற்றுள்ளது. மெல்போர்னில் 14 மேட்சில் 4 போட்டிகளில் வென்றுள்ளது இந்திய அணி.

  இதற்கு முன்பாக 50 ஆண்டுகளில் இருமுறை வெளிநாட்டு அணிகள் முதல் டெஸ்ட்டில் தோற்று 2வதில் வெற்றி பெற்ற சம்பவம் 2 முறை நடந்துள்ளது. மே.இ.தீவுகள் 1975-76-ல் பெர்த்தில் 0-1 என்ற தோல்விக்குப் பிறகு வென்றது. அதன் பிறகு ஹோபார்ட்டில் நியூஸிலாந்து 2011 தொடரில் 0-1லிருந்து 2வது டெஸ்ட்டை வென்றது.

  தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூஸிலாந்து, ஆஸ்திரேலியாவில் இந்திய அணி 23 முறை முதல் டெஸ்ட்களை தோற்றுள்ளது. ஆனால் 2010-11-ல்தான் தென் ஆப்பிரிக்காவில் 2வது டெஸ்ட் போட்டியில் மீண்டெழுந்து வெற்றி பெற்றது.

  அடுத்தடுத்து இரண்டு பாக்சிங் டே டெஸ்ட் போட்டிகளை மெல்போர்னில் வென்றது முதலில் பாகிஸ்தான் அணி, இது 1979, 1981-ல் வென்றது. இப்போது இந்திய அணி கடந்த தொடர், இந்தத் தொடர் மெல்போர்ன் டெஸ்ட்டை வென்றுள்ளது. இதற்கு முன்பாக இந்திய அணி பிஷன் பேடி தலைமையில் 1977-லும் கவாஸ்கர் தலைமையில் 1981லும் மெல்போர்னில் அடுத்தடுத்து வென்றது.

  டாஸ் தோற்ற பிறகு இந்தியா டெஸ்ட்டில் வெல்வது இதற்கு முன்பாக அந்த புகழ்பெற்ற 2003ம் ஆண்டு அடிலெய்ட் டெஸ்ட், பிறகு 2010-ல் இலங்கையில், இப்போது மெல்போர்னில் டாஸ் தோற்று டெஸ்ட்டை வென்றுள்ளது.
  Published by:Muthukumar
  First published: