முகப்பு /செய்தி /விளையாட்டு / ஆஸி.யின் கடைசி விக்கெட்... இந்தியாவின் கொண்டாட்டம்... வீடியோ!

ஆஸி.யின் கடைசி விக்கெட்... இந்தியாவின் கொண்டாட்டம்... வீடியோ!

ஆஸி. அணியின்  கடைசி விக்கெட்டை வீழ்த்திய இஷாந்த் சர்மாவை பாராட்டும் இந்திய வீரர்கள். (BCCI)

ஆஸி. அணியின் கடைசி விக்கெட்டை வீழ்த்திய இஷாந்த் சர்மாவை பாராட்டும் இந்திய வீரர்கள். (BCCI)

#MelbourneTest: Australian Cricket Team Last Wicket | 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது.

  • 1-MIN READ
  • Last Updated :

மெல்போர்ன் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணியின் கடைசி விக்கெட் போன வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, முதல் இன்னிங்சில் 443 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 151 ரன்களில் சுருண்டது. பும்ரா 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

Bumrah, பும்ரா
மெல்போர்ன் டெஸ்டின் முதல் இன்னிங்சில் பும்ரா 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். (Twitter)

ஆஸி.க்கு ‘பலோ ஆன்’ கொடுக்காமல் 296 ரன்கள் முன்னிலையுடன் 2-ம் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி, 106 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதன்மூலம், 399 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் ஆஸ்திரேலிய அணி, சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. 4-ம் நாள் முடிவில் அந்த அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 258 ரன்கள் எடுத்தது.

BCCI, Indian Team Celebration
மெல்போர்னில் வெற்றிக் கொண்டாட்டத்தில் இந்திய அணி வீரர்கள். (BCCI)

பேட் கம்மின்ஸ் 61 ரன்களுடனும், நாதன் லியோன் 6 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 5-ம் நாள் ஆட்டம் தொடங்கியதும், கம்மின்ஸ் 63 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து, இஷாந்த் சர்மா வேகத்தில் ஆஸ்திரேலிய அணி கடைசி விக்கெட்டான நாதன் லியோன் 7 ரன்னில் அவுட்டானார். 2-வது இன்னிங்சில் அந்த அணி 261 ரன்களுக்கு ஆட்டமிழந்ததால், இந்திய அணி 137 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலிய அணியின் கடைசி விக்கெட் போன வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது.

37 ஆண்டுகளுக்குப் பின், மெல்போர்ன் மைதானத்தில் விராட் கோலி தலைமையில் இந்திய அணி வெற்றிக்கொடியை நாட்டியுள்ளது. சர்வதேச டெஸ்ட் போட்டியில் இந்தியா பெறும் 150-வது வெற்றி இதுவாகும்.

#AUSvIND இந்தியா அபார வெற்றி - தொடரில் முன்னிலை

Also Watch...

First published:

Tags: India vs Australia 2018, Ishant sharma, Melbourne