அடிலெய்டுக்குப் பிறகு ஒரு பேச்சும் இல்லை; இங்கு வந்தோம் வென்றோம்: ரவிசாஸ்திரி பெருமிதம்

ரவி சாஸ்திரி.

இந்திய ரசிகர்களுக்கு மெல்போர்ன் வெற்றி ஒரு புத்தாண்டுப் பரிசு என்று இந்திய அணி தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பெருமை பொங்கத் தெரிவித்தார்.

 • Last Updated :
 • Share this:
  மெல்போர்னில் இந்திய அணி பெற்ற புத்தெழுச்சி வெற்றிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ரவிசாஸ்திரி இந்திய அணியின் தைரியத்தையும் உறுதியையும் பாராட்டிப் பேசினார்.

  36 ஆல் அவுட்டிலிருந்து 3 நாட்களில் புத்தெழுச்சி பெறுவது சாதாரணமல்ல. சிராஜ், கில் நல்ல முதிர்ச்சியையும் கட்டுக்கோப்பையும் வெளிப்படுத்தினர் என்கிறார் ரவிசாஸ்திரி.

  மெல்போர்ன் டெஸ்ட் போட்டியை மூன்றரை நாட்களில் இந்தியா வெற்றி பெற்றது குறித்து ரவிசாஸ்திரி கூறியதாவது:

  “ஒரு பேச்சும் இல்லை, மெல்போர்ன் வந்தோம் வென்றோம் அவ்வளவுதான். இந்திய ரசிகர்களுக்கு மெல்போர்ன் வெற்றி ஒரு புத்தாண்டுப் பரிசு. 36 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன பிறகும் இந்திய அணியை ஆதரித்த ரசிகர்களுக்கு புத்தாண்டு பரிசே இந்த வெற்றி.

  மகிழ்ச்சியான புத்தாண்டைக் கொண்டாடும் லட்சக்கணக்கான ரசிகர்களுக்கு அணியின் அன்பளிப்பே இந்த வெற்றி. அவர்களுக்கு அணி அளித்த புத்தாண்டு வாழ்த்து செய்தியே இந்த வெற்றி.

  அடிலெய்டில் நம்மை ஊதிவிட்டனர், ஊதிவிட்டனர் என்றால் உண்மையில் ஊதித்தான் விட்டார்கள். ஆஸ்திரேலியா போன்ற அணிகளுக்கு எதிராக 5 நாட்களும் சிறப்பாக ஆட வேண்டும், சவாலாக இருக்க வேண்டும், ஓன்று இரண்டு நாட்களுக்கு மட்டும் சிறப்பாக ஆடினால் போதாது.

  இரண்டு அறிமுக வீரர்களும் நல்ல முதிர்ச்சியும் அணுகுமுறையும் காட்டினார்கள். இத்தகைய பாணியிலான கிரிக்கெட்டைத்தான் நாங்கள் 3-4 ஆண்டுகளாக் ஆடிவருகிறோம். இன்று சிராஜ் வீச்சு தனிச்சிறப்பானது, முதல் டெஸ்ட் ஆடுவது போலவே இல்லை, அத்தனை முதிர்ச்சியுடன் வீசினார்.

  இவ்வாறு கூறினார் ரவிசாஸ்திரி
  Published by:Muthukumar
  First published: