டெஸ்ட் தொடரில் முதல் சதம் அடித்த மாயன்க் அகர்வால்... விக்கெட் எடுக்க போராடும் தென்னாப்பிரிக்க வீரர்கள்

டெஸ்ட் தொடரில் முதல் சதம் அடித்த மாயன்க் அகர்வால்... விக்கெட் எடுக்க போராடும் தென்னாப்பிரிக்க வீரர்கள்
சதமடித்த மாயன்க் அகர்வால்
  • News18
  • Last Updated: October 3, 2019, 11:06 AM IST
  • Share this:
இந்திய அணி வீரர் மாயன்க் அகர்வால் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து அசத்தினார்

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி 3 டி20 , 3 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் 20 ஓவர் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து, மூன்று போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடர் நேற்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோஹித் சர்மா, மாயன்க் அகர்வால் ஆகியோர் தென் ஆப்பிரிக்க அணியின் பந்துவீச்சை பவுண்டரி, சிக்ஸர்களாக விளாசினர். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர்கள் செய்வது அறியாமல் திகைத்தனர்


அதிரடியாக விளையாடிய ரோஹித் சர்மா 154 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். டெஸ்ட் போட்டிகளில் ரோஹித் சர்மா அடித்த 4-வது சதம் இதுவாகும். அத்துடன், தொடக்க வீரராக களம்கண்ட முதல் போட்டியிலேயே சதம் விளாசி, தன் மீதான விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்தார்.

இந்நிலையில் முதல் நாள் ஆட்டத்தின் போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 202 ரன்களை எடுத்திருந்தது. ரோஹித் சர்மா 115 ரன்களுடனும் மாயன்க் அகர்வால் 84 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.இந்நிலையில் 2-ம் நாள் ஆட்டத்தில் மாயன் அகர்வால் 204 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். டெஸ்ட் போட்டிகளில் மாயன்க் அகர்வால் அடித்த முதல் சதம் இதுவாகும்Also watch

First published: October 3, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...