சதம் அடித்து அசத்திய மயங்க் அகர்வால்... வலுவான நிலையில் இந்திய அணி

news18
Updated: October 10, 2019, 3:01 PM IST
சதம் அடித்து அசத்திய மயங்க் அகர்வால்... வலுவான நிலையில் இந்திய அணி
news18
Updated: October 10, 2019, 3:01 PM IST
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வீரர் மயங்க் அகர்வால் சதம் அடித்து அசத்தினார்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, தலா 3 போட்டிகளைக் கொண்ட 20 ஓவர், டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டித் தொடர்களில் பங்கேற்றுள்ளது. 20 ஓவர் தொடர் சமனில் முடிவடைந்த நிலையில், விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதையடுத்து 2-வது டெஸ்ட் போட்டி புனே மைதானத்தில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.


முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்து அசத்திய ரோஹித் சர்மா 14 ரன்களுக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார்.

எனினும் நிதானமாக விளையாடிய மயங்க அகர்வால் 183 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான அடுத்தடுத்தப் போட்டியில் ஷேவாக்குக்குப் பிறகு சதம் அடித்த இரண்டாவது வீரர் என்ற சாதனையைப் படைத்தார் மயங்க் அகர்வால்.



அவருடன் ஜோடி சேர்ந்த புஜாரா நிதானமாக விளையாடி அரை சதம் கடந்து 58 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.



தற்போது வரை இந்திய அணி 57 ஓவர்களில்  2 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்களை எடுத்துள்ளது.

Also watch

First published: October 10, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...