1983 உலகக் கோப்பையில் அவர் பேட் செய்த நினைவு அப்படியே உள்ளது : யஷ்பால் சர்மா இறப்புக்கு சச்சின், சேவாக் இரங்கல்

யாஷ்பால் சர்மா.

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், கபில்தேவ் தலைமையில் 1983 உலகக்கோப்பையை இந்திய அணி வென்ற போது அந்த அணியின் முக்கியமான வீரருமான யஷ்பால் சர்மா இன்று மாரடைப்பால் காலமானார், இவருக்கு வயது 66. இவரது மரணத்துக்கு முன்னாள் இந்நாள் வீரர்கள் இரங்கற் செய்தி வெளியிட்டுள்ளனர்.

  • Share this:
    யஷ்பால் சர்மா ஒரு மிகச்சிறந்த வீரர் 1983 உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி உலக சாம்பியன் அணியின் முக்கியமான வீரர். இவரது மறைவு கிரிக்கெட் உலகை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

    பஞ்சாப், லூதியனாவில் ஆகஸ்ட் 11, 1954ம் ஆண்டு பிறந்தார் யஷ்பால் சர்மா. 1979-ல் இங்கிலாந்துக்கு எதிராக முதல் டெஸ்ட்டில் அறிமுகமான யஷ்பால் சர்மா `978-ல் முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக அறிமுகமானார்.

    இந்நிலையில் சச்சின், சேவாக், லஷ்மண் உள்ளிட்டவர்கள் யஷ்பால் சர்மாவுக்கு தங்கள் இரங்கலை வெளியிட்டுள்ளனர்.



    சச்சின் டெண்டுல்கர்: யஷ்பால் சர்மா மறைவு என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. வலியை தருகிறது. 1983 உலகக்கோப்பைத் தொடரில் அவர் பேட் செய்த இனிய நினைவு இன்னும் அப்படியே உள்ளது. இந்திய கிரிக்கெட்டுக்கு அவரது பங்களிப்பு எப்போதுமே நினைவு கூரத்தக்கது, அவரது குடும்பத்துக்கு எனது உண்மையான இரங்கல்கள்.

    Also Read: Yashpal Sharma | 1983 உலகக்கோப்பை சாம்பியன் வீரர் யஷ்பால் சர்மா மாரடைப்பால் திடீர் மரணம்

    விரேந்திர சேவாக்: யஷ்பால் சர்மாஜி இறப்பு எனக்கு வருத்தமளிக்கிறது. 1983 உலகக்கோப்பை வெற்றி ஹீரோக்களில் ஒருவர். மனமார்ந்த இரங்கல்கள். ஓம் சாந்தி.

    வெங்கடேஷ் பிரசாத்: 1983 உலகக்கோப்பை வெற்றியாளரின் மறைவு என் இதயத்தை சுக்குநூறாக்கியது. அவரது குடும்பம் மற்றும் நண்பர்களுக்கு என் மனமார்ந்த இரங்கல்கள். அவரது ஆன்மா நற்கதியை அடையட்டும். ஓம் சாந்தி.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    முன்னாள் வீரர் டொட்டா கணேஷ்: யஷ்பால் சர்மா உயிரோடு இல்லை என்பதை ஜீரணிக்க முடியவில்லை. யஷ்பால் என்றால் ஆற்றலின் தொகுப்பு. அவரது குடும்பத்தினாருக்காக பிரார்த்தனை செய்கிறேன்.

    ஆர்.பி.சிங்: யஷ்பால் மறைவு எனக்கு மாபெரும் துன்பத்தை அளிக்கிறது. எங்களது குழந்தைப்பருவ ஹீரோ, 1983 உலகக்கோப்பையில் அவர் ஆடியது அப்படி.

    யுவராஜ் சிங்: யஷ்பால்ஜியின் அகால மரணம் துயரத்தை அளிக்கிறது. அவரது ஆன்மா சாந்தியடையட்டும்.

    லஷ்மண்: யஷ்பால் மறைவு எனும் பேரிடிச் செய்தி. 1983 உலகக்கோப்பை அணியில் ஆடிய ஹீரோ. இவரது குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
    Published by:Muthukumar
    First published: