கொலையை விட மேட்ச் பிக்சிங் பெரிய குற்றம் - தோனி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சூதாட்ட புகாரில் சிக்கியது பற்றி 'Roar of the Lion'என்ற ஆவணப்படத்தின் ட்ரெய்லரில் தோனி கருத்து தெரிவித்துள்ளார்.

கொலையை விட மேட்ச் பிக்சிங் பெரிய குற்றம் - தோனி
எம்.எஸ்.தோனி
  • News18
  • Last Updated: March 11, 2019, 8:30 AM IST
  • Share this:
மேட்ச் பிக்சிங் கொலையை விட பெரிய குற்றம் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி கூறியுள்ளார்.

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தோனி, ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்து வருகிறார். 2013-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2016, 2017 இரண்டு ஆண்டுகள் விளையாட தடை விதிக்கப்பட்டது.

இதையடுத்து தடை முடிந்து கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணி பங்கேற்று சாம்பியன் பட்டமும் வென்றது.


இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சூதாட்ட புகாரில் சிக்கியது பற்றி 'Roar of the Lion' என்ற ஆவணப்படத்தின் ட்ரெய்லரில் தோனி கருத்து தெரிவித்துள்ளார்.

45 நொடிகள் ஓடும் 'Roar of the Lion' ட்ரெய்லரில் தோனி, "அணி சூதாட்ட புகாரில் ஈடுபட்டிருந்தது. என் மீதும் குற்றம் சாட்டப்பட்டது. அது அனைவருக்கும் கடினமான காலகட்டமாக இருந்தது. தண்டனை கடுமையானது என ரசிகர்கள் நினைத்தனர். அதிலிருந்து மீண்டு வந்தது உணர்ச்சிப்பூர்வமான ஒன்று. மேட்ச் பிக்சிங் கொலையை விட பெரிய குற்றம்" எனத் தெரிவித்துள்ளார்.

First published: March 11, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்