இந்தியா - தென்னாப்பிரிக்கா இறுதி டெஸ்ட்... முக்கிய வீரர் விலகியதால் சிக்கல்...!

INDvSA

  • Share this:
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டி வரும் 19ம் தேதி ராஞ்சியில் தொடங்க உள்ளது. காயம் காரணமாக தென்னாப்பிரிக்கா அணி வீரர் மார்க்ரம் இந்த டெஸ்ட் போட்டியிலிருந்து விலகி உள்ளார்.

புனேவில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 137 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. புனே டெஸ்ட் வெற்றியின் மூலம் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரையும் வென்றது.

தென்னாப்பிரிக்கா அணியின் தொடக்க வீரர் மார்க்ராம் மணிக்கட்டில் ஏற்பட்ட காயம் காரணமாக அடுத்த டெஸ்ட் போட்டியிலிருந்து விலகி உள்ளார். சிடி ஸ்கேனில் காயம் பலமாக உள்ளதால் அவர் இந்த தொடரிலிருந்து விலகி உள்ளார்.

இந்தியாவிற்கு எதிரான தொடரில் மார்க்ரம் பெரியளவில் சோபிக்கவில்லை. புனே டெஸ்ட்டில் 2 இன்னிங்சிலும் மார்க்ரம் டக் அவுட்டாகினார் என்பது குறிப்பிடதக்கது. தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான தொடாரை 3-0 என்று வெல்ல இந்திய அணி முனைப்புடன் உள்ளது.

Also Watch

Published by:Vijay R
First published: