இந்திய கிரிக்கெட் அணியில் இவர்தான் அபாயகரமான ஆட்டக்காரர் என்று மூத்த வீரர் ஒருவரை, ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர் மர்கஸ் ஸ்டாய்னிஸ் வியப்புடன் கூறியுள்ளார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளது. முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் 8ஆம் தேதி நாக்பூரில் தொடங்குகிறது. இரண்டாவது போட்டி பிப்ரவரி 17ஆம் தேதி டெல்லியிலும், மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மார்ச் 1ஆம் தேதி இமாச்சலப் பிரதேசத்திலும், கடைசி டெஸ்ட் போட்டி மார்ச் 9ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறுகிறது.
டெஸ்ட் போட்டியை தொடர்ந்து 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது. இந்த போட்டிகள் மும்பை. விசாகப்பட்டினம் மற்றும் சென்னையில் நடைபெற உள்ளன. தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை கைப்பற்றிய உற்சாகத்தில், ஆஸ்திரேலிய அணி விரைவில் இந்தியாவுக்கு வர உள்ளது. இந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றினால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி எளிதாக முன்னேறி விடும். இதனால் இந்த கிரிக்கெட் தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர் மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் இந்த தொடர் பற்றி கூறியதாவது- இந்தியா வலுவான அணி என்பதில் சந்தேகமில்லை. ஆனால் நாங்கள் மிக வலுவான அணி. எங்களிடம் சிறந்த ஸ்பின்னர்கள் உள்ளனர். இந்திய அணியைப் பொறுத்தவரையில் விராட் கோலி தான் ஆஸ்திரேலிய அணிக்கு இந்த தொடரில் மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருப்பார். இந்த தொடரை கைப்பற்றுவதற்கு ஆஸ்திரேலிய அணி கடுமையாக போராடும். இவ்வாறு அவர் கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cricket