Home /News /sports /

சவுரவ் கங்குலி உலகக்கோப்பை வென்றுள்ளாரா?- கோலிக்கு ஆதரவாக ரவிசாஸ்திரி காட்டம்

சவுரவ் கங்குலி உலகக்கோப்பை வென்றுள்ளாரா?- கோலிக்கு ஆதரவாக ரவிசாஸ்திரி காட்டம்

ரவி சாஸ்திரி

ரவி சாஸ்திரி

விராட் கோலிக்கும் பிசிசிஐக்கும் நடக்கும் மோதல் பற்றி மனம் திறந்த ரவி சாஸ்திரி, உலகக்கோப்பை, ஐசிசி டிராபி வெல்வதுதான் அளவு கோல் என்றால் கங்குலி வென்றுள்ளாரா என்று கேள்வி எழுப்பி சர்ச்சையைக் கிளப்பியுள்ளார் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி.

மேலும் படிக்கவும் ...
    விராட் கோலிக்கும் பிசிசிஐக்கும் நடக்கும் மோதல் பற்றி மனம் திறந்த ரவி சாஸ்திரி, உலகக்கோப்பை, ஐசிசி டிராபி வெல்வதுதான் அளவு கோல் என்றால் கங்குலி வென்றுள்ளாரா என்று கேள்வி எழுப்பி சர்ச்சையைக் கிளப்பியுள்ளார் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி.

    விராட் கோலி டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகுவது குறித்து ஏற்கனவே பலர் பேசியதாகவும், கிசுகிசுக்களில் ஈடுபடுவது தனது பழக்கமல்ல என்றும் இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

    விராட் கோலி விவகாரம் குறித்து ரவி சாஸ்திரி ஏஎன்ஐ-யிடம் கூறும்போது, “விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகுவது குறித்து ஏற்கனவே பலரும் பேசி வருகின்றனர். கிசுகிசுக்களில் இறங்குவதற்கும் விவரங்களைப் பெறுவதற்கும் எனக்கு நேரம் இல்லை. ஏழு வருட பயிற்சிக்காலத்துக்குப் பிறகு நான் ஓய்வு எடுத்தேன், நான் அணியின் ஒரு பகுதியாக இருந்தேன் என்பதால் பொது இடங்களில் அழுக்கைக் கழுவுவதில் எனக்கு விருப்பமில்லை. அது என்னோடு போகவே செய்யும். எனது வீரர்கள் யாரையும் பொது மேடைகளில் விவாதிக்க மாட்டேன், இதில் நான் மிகவும் தெளிவாக இருக்கிறேன்.

    உலகக்கோப்பை வெல்வது, ஐசிசி டிராபி வெல்வதுதான் அளவுகோல் என்றால் பல கேப்டன்களும் வெல்லவில்லை என்றுதான் கூறுவேன், கங்குலி உலகக்கோப்பை வென்றாரா? கவாஸ்கர் வென்றாரா? அனில் கும்ப்ளே, விவிஎஸ் லஷ்மண், ரோகித் சர்மாவும் வென்றதில்லை, அதற்காக இவர்கள் எல்லாம் மட்டமான வீரர்களா? தோனி, கபில்தேவ் மட்டுமே இதில் தேறுவார்கள், சச்சின் டெண்டுல்கர் 6 உலகக்கோப்பைகளில் ஆடிய பிறகே கடைசியாக உலகக்கோப்பையை வென்றார்.

    எனவே உலகக்கோப்பையெல்லாம் சும்மா பேச்சு, ஒருவர் எப்படி ஆடுகிறார் என்றுதான் பார்க்க வேண்டும். நேர்மையாக ஆடுகிறாரா என்று பார்க்க வேண்டும். இப்படித்தான் வீரர்களை எடைபோட வேண்டும்.

    கங்குலி, கோலி விரிசல் குறித்து...

    கங்குலி, கோலி இடையே என்ன தகவல் தொடர்பு இருந்தது என்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. நான் இருவரிடமும் இன்னும் பேசவில்லை பேச வாய்ப்பு கிடைக்கும் போது பேசுவேன், அரைகுறை அறிவுடன் போய் பேசக்கூடாது, முழுதும் தெரிந்த பின்னே பேசாமல் இருக்கவும் கூடாது.

    தென் ஆப்பிரிக்கா தொடரில் தோல்வி குறித்து...

    உண்மையைச் சொல்வதானால், நான் தொடரைப் பார்க்கவில்லை. நான் ஒரு பந்தைக் கூட பார்க்கவில்லை. மக்கள் பேசுவதை வைத்துதான் நான் முடிவைப் பார்த்தேன், ஆனால் நான் ஒரு பந்தைக் கூட பார்க்கவில்லை.

    எப்படி தரம் தாழ்ந்து போக முடியும்? ஐந்து வருடங்களாக நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக இருந்திருக்கிறோம். எதுவும் செய்ய முடியாது, ஒவ்வொரு ஆட்டத்திலும் வெற்றி பெற முடியாது. வெற்றி விகிதம் 65 சதவீதமாக இருக்கும்போது, ​​எதற்காகக் கவலைப்பட வேண்டும்? நீங்கள் ஒரு தொடரை இழந்துவிட்டீர்கள், அவ்வளவுதான், அதற்கு ஏன் இந்த கவலை?

    ரோகித் சர்மா கேப்டனாவது பற்றி...

    நான் மூன்று மாதங்களாக கிரிக்கெட் ஆட்டங்களைப் பார்க்கவில்லை. பார்க்காமல் நான் எப்படி ஜட்ஜ்மெண்ட் கொடுக்க முடியும். விராட் கோலியின் முடிவை மதிக்க வேண்டும் முன்னால் சுனில் கவாஸ்கர், சச்சின் போன்றோர் கூட தன் பேட்டிங் பார்மை மேம்படுத்த கேப்டன்சியை விட்டுச் சென்றுள்ளனர்.

    இவ்வாறு கூறினார் ரவி சாஸ்திரி.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Ganguly, Ravi Shastri, Virat Kohli

    அடுத்த செய்தி