மான்கட் சர்ச்சைக்கு தீர்வு கண்ட சிறுவர்களின் வினோத ஐடியா...! வைரலாகும் வீடியோ

ஐசிசியின் மான்கட் முறைக்கு இந்த வீடியோ மூலம் தீர்வு கிடைத்து விட்டதாக நெட்டிசன்கள் பலர் இந்த வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர்.

Vijay R | news18
Updated: April 8, 2019, 8:21 PM IST
மான்கட் சர்ச்சைக்கு தீர்வு கண்ட சிறுவர்களின் வினோத ஐடியா...! வைரலாகும் வீடியோ
கிரிக்கெட் விளையாடும் சிறுவர்கள்
Vijay R | news18
Updated: April 8, 2019, 8:21 PM IST
மான்கட் முறையில் வீரர்களை அவுட்டாக்கும் முறைக்கு வினோதமான முறையில் ரன் ஓடும் சிறுவர்களின் வீடியோ வைரலாகி வருகிறது.

ஜெய்ப்பூரில் நடந்த 4-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் ஜோஸ் பட்லரை, மான்கட் முறையில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின் ஆட்டமிழக்கச் செய்தார்.

இதில், அஸ்வின் பந்துவீசும்போது நான் ஸ்ட்ரைக்கர் பட்லர் கிரீஸை விட்டு வெளியே சென்றதால், பந்துவீசுவதை பாதியில் நிறுத்திய அஸ்வின் ரன் அவுட் செய்தார்.ஐசிசி விதிமுறைப்படி அஸ்வின் செய்தது அவுட்தான் என்றாலும், அஸ்வின் செய்த மான்கட் அவுட், சர்வதேச கிரிக்கெட் அரங்கில் பெரும் விவாதப் பொருளாக உருவெடுத்தது. ஒரு முறை எச்சரிக்கை விடுத்திருக்கலாம் என்பது கிரிக்கெட் ஆர்வலர்களின் கருத்தாக இருந்தது.

— Kartik Murali (@kartikmurali) March 25, 2019

Loading...

மான்கட் முறையில் அவுட் செய்த அஸ்வினை கிண்டல் செய்யும் பல மீம்ஸ்கள் இணையத்தில் வைரலானது. அதில் ஒன்றாக சிறுவர்கள் விளையாடி கொண்டிருக்கும் கிரிக்கெட் போட்டியில் நான் ஸ்டிரைக்கில் இருக்கும் ஒருவர் மிக நீளமான தென்னை மட்டையை வைத்து கொண்டுள்ளார்.

Looking forward to bringing you the 2020 range, full of our usual innovations...pic.twitter.com/FrEEuw9r6T
இரண்டே அடியில் நீளமான மட்டையை கொண்டு ஒடி ரன் எடுத்து விடுகின்றனர். ஐசிசியின் மான்கட் முறைக்கு இதன் மூலம் தீர்வு கிடைத்து விட்டதாக நெட்டிசன்கள் பலர் இந்த வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர்.

தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

ஐ.பி.எல் தகவல்கள்:

POINTS TABLE:


SCHEDULE TIME TABLE:


ORANGE CAP:


PURPLE CAP:


RESULTS TABLE:
First published: April 8, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...