Home /News /sports /

MCC: கிரிக்கெட் விதிமுறைகளில் சுவாரஸ்ய மாற்றங்கள்: ‘மன்கடிங்’ அவுட் அநியாயம் அல்ல

MCC: கிரிக்கெட் விதிமுறைகளில் சுவாரஸ்ய மாற்றங்கள்: ‘மன்கடிங்’ அவுட் அநியாயம் அல்ல

கிரிக்கெட் விதிமுறைகளில் சுவாரஸ்ய மாற்றங்கள்

கிரிக்கெட் விதிமுறைகளில் சுவாரஸ்ய மாற்றங்கள்

மன்கடிங் அல்ல அதுவும் ரன் அவுட் தான்! அஸ்வின் எப்போது ஜாஸ் பட்லரை ரன்னர் முனையில் பந்து வீசும் முன்பே ரன் அவுட் செய்தாரோ அது முதல் பெரிய சர்ச்சைகளைக் கிளப்பி, அது அநியாயம், ஸ்போர்ட்ஸ்மேன் ஸ்பிரிட் இல்லாதது என்றெல்லாம் கூறப்பட்டது, ஆனால் இனி அப்படியல்ல, எம்.சி.சி. அதனை அன்ஃபேர் ப்ளே என்ற சட்டத்திலிருந்து அகற்றி,  38ம் பிரிவு ரன் அவுட் என்பதாக மாற்றிவிட்டது. இனி மன்கடிங் அல்ல அதுவும் ரன் அவுட் தான்.

மேலும் படிக்கவும் ...
    எம்சிசி (MCC)புதன்கிழமையன்று 2022க்கான புதிய சட்ட விதிகளை அறிவித்துள்ளது. MCC சட்டங்கள் துணைக் குழு கடந்த வாரம் ஒரு கூட்டத்தை நடத்தியது, அதில் அவர்கள் 2022 சட்ட நெறிமுறைக்கான பல மாற்றங்களுக்கு ஒப்புதல் அளித்தனர். முன்னதாக, கிரிக்கெட்டின் 2017 சட்டங்கள் கிரிக்கெட்டை வடிவமைப்பதில் மிகவும் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தன, மேலும் 2022 விதிகளும் அதையே பின்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அக்டோபர் 1ம் தேதி முதல் புதிய சட்ட விதிகள் அமலுக்கு வருகிறது.

    மன்கடிங் அல்ல அதுவும் ரன் அவுட் தான்!

    அஸ்வின் எப்போது ஜாஸ் பட்லரை ரன்னர் முனையில் பந்து வீசும் முன்பே ரன் அவுட் செய்தாரோ அது முதல் பெரிய சர்ச்சைகளைக் கிளப்பி, அது அநியாயம், ஸ்போர்ட்ஸ்மேன் ஸ்பிரிட் இல்லாதது என்றெல்லாம் கூறப்பட்டது, ஆனால் இனி அப்படியல்ல, எம்.சி.சி. அதனை அன்ஃபேர் ப்ளே என்ற சட்டத்திலிருந்து அகற்றி,  38ம் பிரிவு ரன் அவுட் என்பதாக மாற்றிவிட்டது. இனி மன்கடிங் அல்ல அதுவும் ரன் அவுட் தான்.

    இது போக மீத மாற்றங்களைப் பார்ப்போம்:

     

    சட்டம் 1 - மாற்று வீரர்கள்

    MCC ஒரு புதிய விதியை அறிமுகப்படுத்தியுள்ளது - சட்டம் 1.3 இது மாற்று வீரர்களைப் பற்றியது. மாற்று வீரர்கள் எந்த வீரருக்காக மாற்றப்பட்ட வீரராக களமிறங்குகிறார்களோ அந்த வீரரின் அந்தஸ்தைப் பெறுவார்கள். . அந்த வீரர் மீதான தடைகள், சலுகைகள், நீக்கல்கள் மாற்று வீரர்களுக்கும் பொருந்தும்.

    சட்டம் 18- பேட்டர் கேட்ச் ஆனால் ரன்னர் கிராஸ் செய்வது செல்லாது:

    உதாரணமாக ஒரு பேட்டர் பந்தை தூக்கி டீப்பில் அடித்து கேட்ச் ஆகி அவுட் ஆகிறார் என்றால் ரன்னர் பேட்டிங் முனைக்கு கிராஸ் செய்வது வழக்கம், அப்படி கிராஸ் செய்தால் அடுத்த பந்தை அவர்தான் எதிர்கொள்வார், இது தற்போது மாற்றப்பட்டுள்ளது, கேட்ச் ஆகி அவுட் ஆகும் வீரர் இடத்துக்கு வரும் புதிதாக களமிறங்கும் வீரர்தான் ஸ்ட்ரைக் எடுக்க வேண்டும், ரன்னர் ரன்னராகவே இருக்க வேண்டும், கிராஸ் செல்லாது.

    டெட் பால் விதிமுறை:

    டெட்-பால் சில நேரங்களில் போட்டியில் முக்கிய பங்கு வகிக்கிறது மற்றும் MCC பல மாற்றங்களைச் செய்து சட்டத்தை மாற்றியுள்ளது. சமீப காலங்களில், ஊடுருவல்காரர்கள் பல சந்தர்ப்பங்களில் மைதானத்திற்குள் நுழைந்து, ஆட்டத்தின் தொடர்ச்சியை இடையூறு செய்தால், சில சமயங்களில் அது இரு தரப்புக்கும் சாதகமாக உள்ளது. விளையாட்டு மைதானத்திற்குள் ஒரு நபர், விலங்கு அல்லது பிற பொருளால் இரு தரப்பும் பாதகமாக இருக்கும் போது நடுவர் அதை டெட் பால் என்று அழைக்க புதிய சட்டம் அனுமதிக்கும்.

    பவுலர் பந்தை வீசும் முன்பாக ஸ்ட்ரைக்கரை ரன் அவுட் செய்யுமாறு முனைக்கு பந்தை விட்டெறிவது:

    ஒரு பந்து வீச்சாளர் தனது பந்து வீச்சிற்குள் நுழைவதற்கு முன் ஸ்ட்ரைக்கரை ரன் அவுட் செய்யும் முயற்சியில் பந்தை த்ரோ செய்தால் அது இப்போது டெட் பந்தாக இருக்கும். இது மிகவும் அரிதான காட்சியாகும், இது இதுவரை நோ பால் என்று அழைக்கப்பட்டு வந்தது.

    பேட்ஸ்மென் கிரீசுக்குள் நகர்ந்து நகர்ந்து ஆடும்போது வைடு எது?- புதிய விதி

    நவீன கால கிரிக்கெட்டில் டி20யெல்லாம் வந்த பிறகு கிரீசுக்குள் பேட்ஸ்மென் கண்டபடி நகர்ந்து பவுலர்களை குழப்பவோ, அல்லது ரன்களை எதிர்பாரா இடத்தில் அடிக்கவோ முயற்சி மேற்கொள்கின்றனர், அப்படி இருக்கும் போது பவுலர் வைடாக வீசுவது வழக்கம். அதை வழக்கமான வைடு ஆக நடுவர்கள் அறிவித்து வந்தனர். ஆனால் இனி ஸ்ட்ரைக்கர் எந்த இடத்தில் கிரீசில் இருக்கிறார் என்பதைப் பொறுத்தே அது வைடா இல்லையா என்பது தீர்மானிக்கப்படும், பவுலர் ஓடி வரத்த்தொடங்கும் போது ஸ்ட்ரைக்கர் இடம் மாறியிருந்தால் அந்த இடம்தான் பேட்டர் நிலையாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு அதிலிருந்துதான் வைடு என்று தீர்மானிக்கப்படும், இப்போது இருப்பது போல் ஸ்டம்புக்கு அருகே இருக்கும் வெள்ளைக்கோட்டை கடந்தா வைடு என்ற விதிமுறை மாற்றப்பட்டுள்ளது.

    ஸ்ட்ரைக்கர் எந்த பந்தையும் அடிக்கலாம்:

    புதிய சட்டம் 25.8 ஆடுகளத்தை விட்டு விலகிச்செல்லும் பந்தை பேட்டர்கள் அடிக்கலாம். ஆனால் பேட்டர் தனது பேட் அல்லது நபரின் சில பகுதிகள் ஆடுகளத்திற்குள் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அப்படி இல்லையெனில் டெட் பால் ஆகும். அதே வேளையில் பேட்டருக்கு வெகுமதியாக, ஆடுகளத்தை விட்டு வெளியேறும்படி கட்டாயப்படுத்தும் எந்தப் பந்தும் நோ பால் என்றும் அழைக்கப்படும்.

    பீல்டிங் அணி நியாயமற்ற முறையில் பீல்டிங் பொசிஷனை மாற்றினால் 5 ரன்கள் பெனால்டி:

    MCC சட்டங்களில் மற்றொரு முக்கியமான மாற்றத்தை ஏற்படுத்தியது. பந்து வீசும்போது பீல்டிங் தரப்பில் நியாயமற்ற முறையில் மாற்றங்கள் செய்தால் பேட்டிங் செய்யும் தரப்புக்கு 5 பெனால்டி ரன்கள் வழங்கப்படும். முன்னதாக, இது டெட்-பால் என்று குறிப்பிடப்பட்டது. அந்த டெட் பந்தில் நல்ல ஷாட் அல்லது பவுண்டரி ரத்து செய்யப்பட்டதால் இது பேட்டிங் பக்கத்திற்கு பாதகமாக மாறியது. இப்போது அப்படியல்ல 5 பெனால்டி ரன்கள் வழங்கப்படும்.

    பந்தில் உமிழ்நீரை தடவி மெருகேற்றுவது:

    இது மிக முக்கியமான ஒரு மாற்றமாகும். கோவிட் 19 காலக்கட்டத்தில் பவுல்ர்களோ அல்லது பீல்டரோ பந்தில் எச்சிலைத் துப்பி அல்லது எச்சிலைக் கொண்டு பளபளப்பேற்றும் முறை ஒழிக்கப்பட்டது, ஆனால் இப்போது அது முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டது. இனி எச்சில் தடவி பந்தை பளபளப்பாக்கினால் அது பந்தைச் சிதைக்கும் முயற்சி அல்லது பந்தின் நிலையை மாற்றியமைக்கும் முயற்சி என்றே கருதப்படும்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Cricket, ICC, R Ashwin

    அடுத்த செய்தி