மகளிர் கிரிக்கெட் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர்-க்கு மஞ்ச்ரேக்கர் பதிலடி ட்வீட்!

#SanjayManjrekar SLAMS #Harmanpreet For Backing #Powar | பவார் பயிற்சியாளராக இல்லாதபோதே இந்திய மகளிர் அணி 50 ஓவர் உலகக்கோப்பையில் இறுதிப்போட்டி வரை சென்றதை நினைவு படுத்துவதாக மஞ்ச்ரேக்கர் கூறியுள்ளார்.

news18
Updated: December 5, 2018, 7:08 PM IST
மகளிர் கிரிக்கெட் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர்-க்கு மஞ்ச்ரேக்கர் பதிலடி ட்வீட்!
ஹர்மன்ப்ரீத் கவுர் & சஞ்சய் மஞ்ச்ரேக்கர்
news18
Updated: December 5, 2018, 7:08 PM IST
மகளிர் அணியில் பயிற்சியாளரின் பணியை மிகைப்படுத்திக் கூற வேண்டாம் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் மஞ்ச்ரேக்கர் ட்விட்டரில் கூறியுள்ளார்.

அண்மையில் வெஸ்ட் இண்டீசில் நடந்த மகளிர் டி-20 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியில் முன்னணி வீராங்கனை மிதாலி ராஜ் எந்தவித காரணமும் இன்றி சேர்க்கப்படவில்லை. இந்த விவகாரம் இந்திய மகளிர் கிரிக்கெட்டில் பல சலசலப்புக்களை ஏற்படுத்தியது. கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் மற்றும் மிதாலி ராஜ் ஆகியோரிடம் பிசிசிஐ உயரதிகாரிகள் தனித்தனியாக விளக்கம் கேட்டனர்.

மிதாலி ராஜ், பிசிசிஐக்கு அனுப்பிய இமெயிலில் அதிகாரத்தில் உள்ளவர்கள் சிலர் தன்னை அணியில் இருந்து நீக்கவிட்டதாகவும், அதற்கு பயிற்சியாளர் ரமேஷ் பவாரும் உதவி செய்ததாகவும் பல்வேறு குற்றச்சாட்டுக்களைக் கூறியிருந்தார். இந்த இமெயில் தகவல்கள் ஊடங்களில் கசிந்து பரபரப்பை ஏற்படுத்தின.

Ramesh Powar, Mithali Raj, BCCI
பயிற்சியாளர் பவாருடன் மிதாலி ராஜ் (BCCI)


ரமேஷ் பவாரும் தனது பங்கிற்கு மிதாலி ராஜ் மீது பல புகார்களை அடுக்கினார். கடந்த 30-ம் தேதியுடன் பவாரின் பயிற்சியாளர் பதவிக்காலம் முடிந்தது. மீண்டும் அவரது ஒப்பந்தத்தை பிசிசிஐ நீட்டிக்கவில்லை. ஒரு சில நாட்களுக்கு முன்பு, பவார் மீண்டும் பயிற்சியாளராக வேண்டும், டி-20 உலகக் கோப்பைக்கு தயாராக அவரது ஆலோசனை வேண்டும் என்று கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் மற்றும் ஸ்மிருதி மந்தனா ஆகியோர் போர்க்கொடி தூக்கினர்.

முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர், ஹர்மன்ப்ரீத் கவுரின் கோரிக்கைக்கு பதிலடி கொடுத்துள்ளார். “ரமேஷ் பவார் பயிற்சியாளராக இல்லாதபோதே இந்திய மகளிர் அணி 50 ஓவர் உலகக் கோப்பையில் இறுதிப்போட்டி வரை சென்றதை நினைவு படுத்துகிறேன். பயிற்சியாளரின் பணி குறித்து மிகைப்படுத்திக் கூற வேண்டாம்.” என்று அவர் ட்விட்டரில் கூறியுள்ளார்.ரமேஷ் பவாருக்கு, கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் மற்றும் ஸ்மிருதி மந்தனா ஆகியோர் ஆதரவு அளித்த நிலையில், மிதாலிக்கு சஞ்சய் மஞ்ச்ரேக்கர் ஆதரவாக களமிறங்கியுள்ளார்.

Also Watch...

First published: December 5, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்