“ஒரு வார்த்தையாவது சொல்லியிருக்கலாம்“ கங்குலியின் செயலுக்கு மம்தா பானர்ஜி வருத்தம்

“ஒரு வார்த்தையாவது சொல்லியிருக்கலாம்“ கங்குலியின் செயலுக்கு மம்தா பானர்ஜி வருத்தம்
மம்தா பானர்ஜி - கங்குலி
  • Share this:
கொல்கத்தாவில் நடைபெற இருந்த இந்தியா - தென்னாப்பிரிக்கா போட்டி ரத்து செய்யப்பட்டதை முறையாக தெரிவிக்கவில்லை என்று மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்ட தென்னாப்பிரிக்கா அணி 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாட திட்டமிடப்பட்டிருந்தது. தர்மசாலாவில் நடைபெற இருந்த முதல் ஒரு நாள் போட்டியின் மழையின் காரணமாக கைவிடப்பட்டது.

அதைத் தொடர்ந்து கொரோனா அச்சம் காரணமாக லக்னோ மற்றும் கொல்கத்தாவில் நடைபெற இருந்த போட்டிகளிலும் ரத்து செய்யப்பட்டது. மார்ச் 18ம் தேதி நடைபெற கொல்கத்தாவில் நடைபெற இருந்த போட்டி ரத்து செய்யப்பட்டது குறித்து காவல்துறைக்கு முறையாக அறிவிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.


இதுதொடர்பாக பேசிய மம்தா பானர்ஜி, “கொல்கத்தாவில் போட்டி நடைபெற வேண்டாமென்று நாங்கள் எதுவும் அறிவிக்கவில்லை. போட்டி ரத்து செய்யப்பட்டால் அது தொடர்பான அதிகாரிகளிடம் சொல்லி இருக்க வேண்டும். ஆனால் எங்களிடம் ஒரு வார்த்தை கூட சொல்லாமல் போட்டியை ரத்து செய்து உள்ளார்கள்“ என்றார்.

Also see:
First published: March 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading