ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

எதற்காக பதவி பறிக்கப்பட்டது? கங்குலிக்காக பிரதமர் மோடிக்கு கோரிக்கை வைத்த மம்தா பானர்ஜி

எதற்காக பதவி பறிக்கப்பட்டது? கங்குலிக்காக பிரதமர் மோடிக்கு கோரிக்கை வைத்த மம்தா பானர்ஜி

மாதிரி படம்

மாதிரி படம்

ஐசிசி தேர்தலில் கங்குலியை போட்டியிட வைக்க வாய்ப்பளிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கோரிக்கை விடுத்துள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின்( பிசிசிஐ) 91வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் மும்பையில் இன்று நடைபெற்றது. இதில் புதிய நிர்வாகிகள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக பி.சி.சி.ஐ. தலைவராக இருந்துவந்த முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலிக்கு மட்டும் பதவி நீட்டிப்பு செய்யப்படவில்லை. அதேநேரத்தில் வாரியத்தின் செயலாளர் பொறுப்பில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய்ஷா தொடர்கிறார்.

  கடந்த 2019 வாக்கில் கங்குலி உடன் ஜெய்ஷா இந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஐசிசி தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்காக தான் கங்குலி பதவி நீட்டிக்கவில்லை என ஒரு பக்கம் தகவல் கூறப்படும் நிலையில் ஐசிசி தலைவர் பதவிக்கான தேர்தல் வேட்புமனு தாக்கல் வரும் அக்.20ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

  இதையும் படிங்க: மைதானத்தில் பாய்ந்து பறந்து பீல்டிங் செய்த விராட் கோலி! இணையதளம் முழுவதும் ஆக்கிரமித்துள்ள விராட் வீடியோஸ்!.

  இந்த நிலையில் ஐசிசி தேர்தலில் கங்குலியை போட்டியிட வைக்க வாய்ப்பளிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கோரிக்கை விடுத்துள்ளார். நேற்று கொல்கத்தா விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, கங்குலியை பிசிசிஐயை வெளியே அனுப்பியது நியாமில்லை. அது தவறானது, மிகவும் வருத்தம் அளிப்பதாக தெரிவித்தார்.

  அவர் பதவியில் இருந்து இறக்கப்பட்டுள்ளார். எதற்காக அவரின் பதவி பறிக்கப்பட்டது? என்ன தவறு செய்தார் அவர்? இது அனைவருக்கும் தெரியும். பெங்கால் மட்டுமல்ல அனைவரும் கங்குலி நினைத்து பெருமை கொள்கிறார்கள். அவர் வங்கத்தின் தாதா மட்டுமல்ல, அண்ணன், தம்பி எல்லாம்தான். அவர் நம் நாட்டிற்கும், ஏன் உலகத்திற்கே பெருமை. ஐசிசி பதவியில் ஒருவரே அல்லது இருவரோ தேர்வாகலாம் என கூறப்படுகிறது. அந்த வகையில், நான் பிரதமருக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோளை விடுக்கிறேன். ஐசிசி தேர்தலில் கங்குலியை போட்டியிட வைக்க வாய்ப்பளிக்க வேண்டும் என்றார்.

  Published by:Arunkumar A
  First published:

  Tags: BCCI, ICC, Mamata banerjee, PM Modi, Sourav Ganguly