தோனியைவிட சிறந்த வீரர் யாரும் இல்லை - ரவி சாஸ்திரி

இந்திய அணி வீரர்கள் உலககோப்பையில் பங்கேற்பதற்கான இங்கிலாந்து புறப்பட்டனர்

தோனியைவிட சிறந்த வீரர் யாரும் இல்லை - ரவி சாஸ்திரி
தோனி
  • News18
  • Last Updated: May 22, 2019, 11:06 AM IST
  • Share this:
இந்த உலகக்கோப்பை தொடரில் தோனியின் பங்கு மிக முக்கியமானது, அவரை விட சிறந்த வீரர் யாரும் இல்லை என்று ரவி சாஸ்திரி பேசியுள்ளார்.

உலகக்கோப்பை தொடர் வருகிற 30-ம் தேதி தொடங்குகிறது. இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்க அணிகள் மோதும் முதல் போட்டி லண்டனில் நடைபெறுகிறது. ஜூன் மாதம் 6-ம் தேதி இந்திய அணி தனது முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியுடன் மோதுகிறது. உலகக்கோப்பை தொடருக்காக அனைத்து அணி வீரர்களும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது இந்திய அணி வீரர்கள் உலகக்கோப்பையில் பங்கேற்பதற்கான இங்கிலாந்து புறப்பட்டனர்




இந்நிலையில் தோனி குறித்து ரவி சாஸ்திரி, ‘இந்த உலகக்கோப்பை தொடரில் தோனியின் பங்கு மிக முக்கியமானது. கடந்த சில ஆண்டுகளாக கீப்பிங்கில் சிறந்து விளங்குகிறார் தோனி. அவரைவிட சிறந்த விக்கெட் கீப்பர் வேறு யாரும் இல்லை.

கேட்ச் பிடிப்பதில் மட்டுமல்ல, ஸ்டெம்பிங், ரன் அவுட் செய்வது என அனைத்திலும் சிறந்து விளங்கிறார். ஆட்டத்தின் முடிவையே மாற்ற அவரின் பங்களிப்பு உதவுகிறது. அவரை விட சிறந்த வீரர் யாரும் இல்லை’ என்று பேசியுள்ளார்.

மேலும் ஐபிஎல் தொடரில் அவருடைய பேட்டிங்கை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருந்தது. இந்த உலகக் கோப்பை தொடரில் மிக முக்கியமான வீரர்களில் தோனியும் ஒருவர். இந்த உலகக்கோபை தொடர் மிகவும் சவாலான ஒன்றாக இருக்கும். அனைத்து அணிகளும் சிறப்பான நிலையில் உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணி மிகவும் பலமாக உள்ளது என்று ரவி சாஸ்திரி பேசியுள்ளார்.Also watch

First published: May 22, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading