முகப்பு /செய்தி /விளையாட்டு / திரைப்படத்தில் நடிக்கிறாரா தோனி? வைரலாகும் போலீஸ் கெட்டப் ஃபோட்டோ…

திரைப்படத்தில் நடிக்கிறாரா தோனி? வைரலாகும் போலீஸ் கெட்டப் ஃபோட்டோ…

தோனி

தோனி

இன்னும் சில தினங்களில் இந்த புகைப்படத்தின் பின்னணி தகவல் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, போலீஸ் கெட்டப்பில் இருக்கும் போட்டோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவர் படத்தில் நடிக்கிறாரா? அல்லது விளம்பர படத்தில் வரும் காட்சியா? என்ற குழப்பத்தில் ரசிகர்கள் உள்ளனர். ஒருநாள் கிரிக்கெட் தொடர் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் உலக கோப்பையை இந்தியாவுக்கு பெற்று தந்தவர் மகேந்திர சிங் தோனி. தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் தோனி, நூற்றுக்கணக்கான விளம்பரப் படங்களில் நடித்துள்ளார். இதன் தொடர்ச்சியாக தோனி என்டர்டெய்ன்மென்ட் என்ற பெயரில் சினிமா படங்களையும் தற்போது அவர் தயாரிக்க தொடங்கியுள்ளார்.

முன்னதாக உலக கோப்பையை வென்ற கேப்டன் தோனியை கௌரவப்படுத்தும் வகையில், அவருக்கு ராணுவத்தில் லெப்டினன்ட் கர்னல் பதவி அளிக்கப்பட்டது. இந்த நிலையில் போலீஸ் கெட்டப்பில் தோனி இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. அவர் திரைப்படத்தில் நடிக்கிறாரா அல்லது விளம்பர படத்தில் வரும் ஒரு காட்சியா என்ற குழப்பத்தில் ரசிகர்கள் ஆழ்ந்துள்ளனர்.

ஒரு சிலர் இயக்குனர் ரோஹித் ஷெட்டியுடைய போலீஸ் யூனிவர்ஸ் படங்களில் தோனி இணைந்துள்ளார் என்றும் கூறியுள்ளனர். ஏனென்றால் பாலிவுட்டில், போலீஸ் படங்கள் இயக்குவதில் ஸ்பெஷலிஸ்டாக இருக்கும் இயக்குனர் ரோஹித் ஷெட்டி, அந்த படங்களை உள்ளடக்கிய யுனிவர்ஸ் ஒன்றை உருவாக்கியுள்ளார். அதில் தோனி இணந்திருக்கிறாரா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இன்னும் சில தினங்களில் இந்த புகைப்படத்தின் பின்னணி தகவல் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலும் இது விளம்பர படமாகவே இருக்க அதிக வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

First published:

Tags: Cricket