வினோத் காம்ப்ளி மிகப்பிரமாதமான முன்னாள் வீரர், அவர் கிரிக்கெட்டில் பெரிய ஸ்டாராக வருவார் என்றே எதிர்பார்க்கப்பட்டது ஆனால் அவரது நடத்தை உள்ளிட்ட பிற காரணங்களும் ஒன்று சேர அவரது கரியர் விரைவில் முடிவுக்கு வந்தது. இதனையடுத்து அவர் இப்போது பிசிசிஐ கொடுக்கும் ஓய்வூதியத் தொகையான ரூ.30,000 த்துடன் மட்டுமே தான் வாழ்வதாகவும், தனக்கு பணக்கஷ்டம் இருக்கிறது என்றும் மிட் டே ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து வினோத் காம்ப்ளி கிரிக்கெட் தொடர்பான பயிற்சி மட்டத்தில் தன்னைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று மும்பை கிரிக்கெட் சங்கத்திடம் வெளிப்படையாகவே கேட்டு விட்டார், ஆனால் அவருக்கு மும்பை கிரிக்கெட் சங்கம் மனம் இறங்கியதா என்று தெரியவில்லை. இந்நிலையில் மகாராஷ்ட்ராவைச் சேர்ந்த தொழிலதிபர் சந்தீப் தோரட் என்பவர் வினோத் காம்ப்ளிக்கு மாதம் ரூ. 1 லட்சம் சம்பளத்துடன் வேலை தருவதாக மனமிறங்கியுள்ளார்.
பல மராத்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகளின் படி மும்பையில் உள்ள சாயாத்ரி இண்டஸ்ட்ரி குழுமம் காம்ப்ளிக்கு வேலை அளித்துள்ளது. இது கிரிக்கெட் தொடர்பான வேலை அல்ல அந்த நிறுவனத்தின் நிதிப்பிரிவில் ஒரு உயர்பதவி வேலை என்று கூறப்படுகிறது. ஒரு தொழிலதிபர் பெருந்தன்மையுடன் வினோத் காம்ப்ளிக்காக மனம் இறங்கியது பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. இதற்குக் காம்ப்ளி என்ன கூறுகிறார் என்பது இனிமேல்தான் தெரியவரும்.
Also Read: ராகுல் டிராவிட்டுக்கு கொரோனா.. ஆசியக் கோப்பை தொடரில் பங்கேற்பது சந்தேகம்
50 ரன்களுக்கும் மேல் சராசரி வைத்திருந்த போது மிகவும் ஆரம்பத்திலேயே ஓய்வு பெற்றார் வினோத் காம்ப்ளி. இது இந்திய அணிக்கு ஒரு பேரிழப்புதான். சச்சின் டெண்டுல்கர் ஒருமுறை கேப்டனான போது வினோத் காம்ப்ளியை மீண்டும் கொண்டு வந்தார், இப்படி பலமுறை வந்தார் சென்றார். இன்று அவருக்கு வெறும் பென்ஷன் தான் வருமானம், பிசிசிஐ ஓய்வு பெற்ற வீரர்களுக்குக் கொடுக்கும் ரூ.30,000 மட்டுமே அவரது வருவாய்.
முன்னதாக காம்ப்ளி தன் பணக்கஷ்டம் பற்றி மிட் டே பேட்டியில் கூறியதாவது: “நான் ஒரு ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர் இன்று என் வாழ்வாதாரம் பிசிசிஐ கொடுக்கும் ரூ.30,000மட்டுமே. அதற்காக இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். இது என் குடும்பத்தை கவனிக்கப்போதுமானதாக உள்ளது. என்னை பயன்படுத்திக் கொள்ளலாம், இளம்வீரர்களுடன் பணியாற்ற விரும்புகிறேன். அமோல் மஜூம்தாரை மும்பை ஹெட் கோச்சாக வைத்துள்ளது. எங்காவது தேவைப்பட்டால் நானும் வருகிறேன்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
மும்பை கிரிக்கெட் சங்கத்திடம் உதவி கேட்டிருக்கிறேன். கிரிக்கெட் இம்ப்ரூவ்மெண்ட் கமிட்டியில் இருக்கிறேன், ஆனால் இது கவுரவ பதவிதான். எனக்கு குடும்பம் இருக்கிறது, 30,000 பென்ஷன் மட்டும் போதாது. எனவே நான் மும்பை கிரிக்கெட் சங்கத்திடம் உதவி கேட்டேன். சச்சின் டெண்டுல்கருக்கு என் நிலைமை தெரியும். ஆனால் நான் அவரிடமிருந்து எதுவும் எதிர்பார்க்கவில்லை. அவர் எனக்கு டெண்டுல்கர்-மிடில்செக்ஸ் குளோபல் அகாடமியைக் கொடுத்தார். நான் மகிழ்ச்சியடைந்தேன், சச்சின் எனக்கு சிறந்த நண்பர். எப்போதும் எனக்கு அவர் இருக்கிறார். அப்போதெல்லாம் ஷர்தாஸ்ரம பள்ளிக்கு எங்கள் அணி செல்லும் போது நான் அங்குதான் உணவு உண்பேன். அங்குதான் சச்சின் என் நண்பனாக எழுந்து நின்றார். நான் மிகவும் ஏழைக்குடும்பத்தில் பிறந்தவன்” என்றார் வினோத் காம்ப்ளி.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cricket, Cricketer, Maharashtra, Sachin tendulkar