Home /News /sports /

இந்திய அணிக்கு நெருக்கடி கொடுக்க ஷாஹின் அப்ரீடி இல்லையே - இன்சமாம் உல் ஹக் வருத்தம்

இந்திய அணிக்கு நெருக்கடி கொடுக்க ஷாஹின் அப்ரீடி இல்லையே - இன்சமாம் உல் ஹக் வருத்தம்

ஷாஹீன் அஃப்ரிடி

ஷாஹீன் அஃப்ரிடி

கடந்த ஐசிசி டி20 உலக கோப்பையில் ஷாஹீன் அப்ரிடி வீசிய முதல் இரண்டு ஓவர்களிலேயே, ரோஹித் ஷர்மா மற்றும் கே.எல்.ராகுலை அவரின் வேகப்பந்து வீச்சால் வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • inter, IndiaPakistanPakistanPakistan
    டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு கடும் நெருக்கடி கொடுத்து பாகிஸ்தானின் வெற்றிக்கு வித்திட்ட இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஷாஹின் அஃப்ரீடி ஆசியக் கோப்பை டி20 தொடரில் காயம் காரணமாக இல்லாதது பாகிஸ்தானுக்கு பெரிய பின்னடைவு என்கிறார் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக்.

    ஆசியக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணியில் ஷாஹின் அப்ரிடிக்கு மாற்று வீரரை பாகிஸ்தான் அறிவித்துள்ளது.  ஷாஹீன் அப்ரிடிக்கு பதிலாக 22 வயதான வலது கை வேகப்பந்து வீச்சாளர் முகமது ஹஸ்னைன் பாகிஸ்தான் அணியில் சேர்கப்பட்டுள்ளார்.

    இந்நிலையில், பாகிஸ்தான் அணியில் ஷாஹீன் அப்ரிடி ஆடாதது அணிக்கு பெரும் பின்னடைவு என பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம்-உல்-ஹக் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், “ஆசிய கோப்பை தொடரிலிருந்து காயம் காரணமாக ஷாஹீன் அப்ரிடி விலகியிருப்பது பாகிஸ்தான் அணிக்கு பெரும் பின்னடைவு. இந்தியா பாகிஸ்தான் மோதிய கடந்த டி-20 உலக கோப்பையில் அவர் முதல் ஓவரிலேயே இந்திய அணிக்கு கடும் நெருக்கடி கொடுத்தார். அவர் இல்லாதது அணிக்கு பெரும் சறுக்கல்" எனக் கூறியுள்ளார்.

    Also Read : ராகுல் டிராவிட்டுக்கு கொரோனா.. ஆசியக் கோப்பை தொடரில் பங்கேற்பது சந்தேகம்

    மேலும் “இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதும் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும். பாகிஸ்தான் அணியில் கேப்டன் பாபர் ஆசம் தவிர யாருமே தொடர்ச்சியாக ரன் குவிக்கவில்லை.” என்று கூறியுள்ளார். கடந்த முறை இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய ஐசிசி டி20 உலக கோப்பையில் ஷாஹீன் அப்ரிடி வீசிய முதல் இரண்டு ஓவர்களிலேயே, ரோஹித் ஷர்மா மற்றும் கே.எல்.ராகுலை அவரின் வேகப்பந்து வீச்சால் வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆசியக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணி வருமாறு:
    பாபர் ஆசம் (கே), ஷதாப் கான், ஆசிப் அலி, ஃபக்கர் ஜமான், ஹைதர் அலி, ஹாரிஸ் ரவுஃப், இப்திகார் அகமது, குஷ்தில் ஷா, முகமது நவாஸ், முகமது ரிஸ்வான், முகமது வாசிம் ஜூனியர், நசீம் ஷா, ஷாநவாஸ் தஹானி, உஸ்மான் காதிர், முகமது காதிர்.

    மேலும் ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில், ரோகித் சர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, ஆர்.அஸ்வின், யுஸ்வேந்திர சஹல், ரவி பிஷ்னோய், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், ஆவேஷ் கான் ஆகிய 15 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டு உள்ளது.
    Published by:Raj Kumar
    First published:

    Tags: Asia cup, India vs Pakistan, Shaheen Afridi

    அடுத்த செய்தி