Home /News /sports /

புஜாராவின் ஒன்றுக்கும் உதவாத இன்னிங்ஸ்! - லார்ட்ஸ் ‘டெட்’ பிட்சிலும் சொதப்பிய ‘சூப்பர் ஸ்டார்’ இந்திய பேட்டிங்!

புஜாராவின் ஒன்றுக்கும் உதவாத இன்னிங்ஸ்! - லார்ட்ஸ் ‘டெட்’ பிட்சிலும் சொதப்பிய ‘சூப்பர் ஸ்டார்’ இந்திய பேட்டிங்!

ரகானே-புஜாரா சதக்கூட்டணி.

ரகானே-புஜாரா சதக்கூட்டணி.

லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் 4ம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி திக்குமுக்காடி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்துள்ளது. இதன் மூலம் இந்தியா 154 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் 4ம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி திக்குமுக்காடி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்துள்ளது. இதன் மூலம் இந்தியா 154 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

செடேஷ்வர் புஜாரா (45), ரகானே (61), சதக்கூட்டணி அமைத்தனர். மார்க் உட் புஜாரா விக்கெட்டை பவுன்சரில் காலி செய்ததன் மூலம் 3 விக்கெட்டுகளை எடுக்க, மொயின் அலி ரகானே, ஜடேஜாவைக் காலி செய்ய இங்கிலாந்து அணி 4ம் நாள் முடிவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது, இந்திய அணிக்கு இன்னும் 71 ரன்கள் அதாவது 225 ரன்கள் முன்னில இருந்தால் இங்கிலாந்தை ஏதாவது செய்து பார்க்க முடியும். ஆனால் புதிய பந்தில் இந்தியா தாங்குமா என்று தெரியவில்லை.

மூன்றாம் நாள் இறுதியில் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு அசிங்கமாக பும்ரா பவுன்சர்களை வீசி அவரைக் காயப்படுத்த முயன்றது கிரிக்கெட் அரங்கின் இழிவான செயல், அதனால் அந்த அணியே ஒட்டுமொத்தமாக திரண்டு எழுந்தது. ஆண்டர்சனே மணிக்கு 140 கிமீ வேகத்தில் வீசும் அளவுக்கு ஆக்ரோஷம் கொண்டார்.

சாம் கரன் பந்தில் ஆட்டமிழந்த கோலி.


பிட்சில் ஒன்றும் இல்லை, ஆனால் ஒன்றுமில்லாத டெட் பிட்சுக்கு மார்க் உட் உயிரூட்டினார். முதல் 5 ஓவர்களில் ஒன்றும் நடக்கவில்லை என்றவுடன் ஜோ ரூட், மார்க் உட்டை கொண்டு வந்தார். வந்து ஒரு ஏத்து ஏத்தினார் 93 கிமீ வேகப்பந்து ராகுலின் மட்டை விளிம்பில் பட்டு ஜோஸ் பட்லரிடம் சரணடைந்தது பந்து.

ஆனால் ரோகித்துக்கு ஷார்ட் பிட்ச் உத்தியே சரி என்று முடிவெடுத்து பின்னால் ஆட்களை நிற்கவைத்து வீசினார் மார்க் உட், ஆஃப் ஸ்டம்ப் லைனில் வீசப்பட்ட ஷார்ட் பிட்ச் பந்தை டீப் ஸ்கொயர்லெக்கிற்கு சிக்ஸ் அடித்த ரோகித் சர்மா. அடுத்த பவுன்சருக்கு ரோகித் தலையைக் குனிந்து கொண்டார், ஆனால் இன்னொரு மார்க் உட் பவுன்சர் அவரது உள்ளுணர்வைத் தட்டி எழுப்ப ஹூக் செய்தார் நேராக மொயின் அலியிடம் கேட்ச் ஆனது. 21 ரன்களில் ரோகித் வெளியேறினார், இந்த பவுன்சர் லெக் ஸ்டம்புக்கு மேலே எழும்பியது. இன்னும் பின்னால் சென்று பந்தை பைன் லெக்கில் அடித்திருக்க வேண்டும், ஆனால் நின்ற இடத்திலிருந்து அடித்ததால் நேராக கைக்குச் சென்றது.

புஜாராவின் பிரசாதங்கள்:

புஜாராவுக்கு உண்மையில் இந்த டெட் பிட்சில் கூட சரளமாக ஆட வரவில்லை என்பது அவரது பேட்டிங் முறையிலேயே அடிப்படை தவறு இருப்பதை உணர்த்துகிறது. 35 பந்துகள் சென்று தன் கணக்கை தொடங்கினார். 100 பந்துகளில் 12 அடித்திருந்தார். 120 பந்துகளுக்குப் பிறகு முதல் பவுண்டரி அடித்தார்.

மற்றபடி பவுண்டரி பந்துகள், புல்டாஸ் ஆகியவற்றைக் கூட பீல்டர் கைக்கு பிரசாதமாக கொடுத்தார், இப்படி இங்கிலாந்தின் பீல்டர்கள் அனைவருக்கும் பிரசாதம் கொடுத்தார். சில பிரசாதங்களை இங்கிலாந்தும் கீழே கொட்ட அதில் எப்போதாவது புஜாராவுக்கு ரன்கள் வந்தன. இப்படி ஆடுவதற்கு பெயர் டெஸ்ட் கிரிக்கெட்டும், அல்ல தடுப்பு உத்தியும் அல்ல போராட்டமும் அல்ல, இது இயலாமை. 206 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தார். இது எவ்வளவு பெரிய விரயம். இந்த டெஸ்ட் போட்டி, நாளையும் ஓவரையும் கடத்துவது பற்றியதல்ல, என்பதே அவருக்குத் தெரியவில்லை. நமக்குத் தேவை ரன்கள். அப்போதுதான் இங்கிலாந்துக்குப் பிரஷர் போட முடியும்.புஜாராவின் ஒவ்வொரு ரன்னையும் ரசிகர்கள் கேலியும், கிண்டலும் செய்து ‘சியர்’ செய்தனர், இதை புஜாரா பெருமையாகக் கருதுகிறார். தன் மீது ஏவப்படும் கேலியையும் கிண்டலையும் கூட பாராட்டாக ஏற்றுக் கொள்ளும், சான்றாண்மை, ஸ்டாயிக் நடுவு நிலைமை அவருக்கு லபித்து விட்டதா அல்லது அவருக்கு புரியவில்லையா என்பது நமக்குப் புரியவில்லை. கடைசியில் ஷார்ட் பிட்ச் பவுன்சர் அம்புகளை எதிர்கொண்டார். லெக் ஸ்லிப், பார்வர்ட் ஷார்ட் லெக், சிலி மிட் ஆஃப் என்று பீல்டிங் நெருக்கப்பட்டது, இதில் அடி வாங்கி பரிதாபமாகக் காட்சியளித்தார், கடைசியில் மார்க் உட்டின் பவுன்சரில் வெளியேறினார்.

கோலிக்கு புஜாராவை அணியிலிருந்து நீக்க தகுதி கிடையாது, ஏனெனில் அவரே பார்முக்குத் திணறிக் கொண்டு ஒரே மாதிரி அவுட் ஆகி வரும்போது தன் அருகதையை மீறி அவர் புஜாராவை எப்படி உட்கார வைக்க முடியும்? விராட் கோலி பாசிட்டிவ் ஆக ஆடுவது என்பதை சுத்தமாக தவறாக கணித்து வருகிறார், நேற்று கவர் டிரைவெல்லாம் ஆடினார், ஆனால் அது அவருக்கு விரித்த வலை என்பதே அவருக்கு தெரியவில்லை. சச்சின் டெண்டுல்கர் சிட்னியில் 2004-ல் 241 ரன்கள் எடுத்த போது ஒரு கவர் டிரைவ் கூட ஆடவில்லை.

கோலியை வீழ்த்துவதற்கு ஒரு செட் பேட்டர்ன் கிடைத்து விட்டது, சாம் கரன் அதை சரியாகச் செய்தார், தன் முந்தைய ஓவரின் கடைசி பந்தைல் லெந்திலிருந்து உள்ளே கொண்டு வர அடுத்த ஓவரின் முதல் பந்தை அதே லெந்தில் வெளியே எடுதார், கோலியைத்தான் கவர் ட்ரைவுக்கு செட் செய்து விட்டார்களே ஆடாமல் விட வேண்டிய பந்துக்கு மட்டையை அசிங்கமாக நீட்டி எட்ஜ் ஆகி வெளியேறினார், பெவிலியன் சென்று ஆத்திரத்தைக் காட்டி என்ன பயன் 20 ரன்களில் காலியானதை மாற்ற முடியுமா?

புஜாரா, ரகானே பார்ட்னர்ஷிப்பை ஊடகங்கள் இங்கிலாந்தை வெறுப்பேற்றியதாக கருதக்கூடும் ஆனால் புஜாரா விக்கெட்டை வேண்டுமென்றேதான் இங்கிலாந்து வீழ்த்தவில்லை என்று கூற முடியும், ரகானேவுக்கு ஜானி பேர்ஸ்டோ கையில் வந்த கேட்சை கோட்டை விட்டார், பரிதாப பவுலர் மொயின் அலி. ரகானே ஷார்ட் பிட்ச் பந்துகளுக்கு எதிராக ஆக்ரோஷ அணுகுமுறை காட்டினார், ஆனால் தரையோடு ஆடினார். கடைசியில் அருமையாக வீசிய மொயின் அலி பந்தில் எட்ஜ் ஆனார்.

கடைசியில் ரிஷப் பந்த் 14 ரன்களுடனும் இஷாந்த் சர்மா 4 ரன்களுடனும் களத்தில் நிற்க, முன்னதாக ஜடேஜா மொயின் அலியின் அருமையான பந்தில் பவுல்டு ஆனார்.

பிட்சில் ஸ்பின் கொஞ்சம் இருக்கிறது நிச்சயம் அஸ்வின் இல்லாததை உணர வேண்டும், ஆனால் கோலி உணரமாட்டார், ஏனெனில் அவருக்கு அவரது பேட்டிங் கவலையே பெருங்கவலையாக உள்ளது.

இந்திய 181/6.  224 ரன்கள் முன்னிலை, விறுவிறுப்பான 5ம் நாள் ஆட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த டெஸ்ட் ட்ரா ஆனால் புஜாராவின் இன்னிங்ஸ் ஆஹா ஓஹோ என்று புகழப்படும் அவல நிலையில்தான் கிரிக்கெட் பற்றிய இந்திய அபிப்ராயங்கள் உள்ளன.
Published by:Muthukumar
First published:

Tags: India Vs England, Test match

அடுத்த செய்தி