ஷமி, பும்ரா 20 ஓவர்கள் ஆடிய பிட்சில் 50 ஓவர்களில் மடிந்த இங்கிலாந்து: ஜோ ரூட் என்ன கூறுகிறார்?

ஜோ ரூட்

லார்ட்ஸ் பிட்ச் 5ம் நாளில் ஒன்றும் இல்லை, கோலி கூறியது போல் முதல் 3நாட்களிலும் ஒன்றுமில்லை, மொத்தத்தில் இது ஒரு டெட் பிட்ச், இதில் இங்கிலாந்து 60 ஓவர்கள் தாக்குப் பிடிக்க முடியாமல் படு தோல்வியடைந்து இனி மீள முடியுமா என்ற கேள்விக்குச் சென்று விட்டது.

  • Share this:
    லார்ட்ஸ் பிட்ச் 5ம் நாளில் ஒன்றும் இல்லை, கோலி கூறியது போல் முதல் 3நாட்களிலும் ஒன்றுமில்லை, மொத்தத்தில் இது ஒரு டெட் பிட்ச், இதில் இங்கிலாந்து 60 ஓவர்கள் தாக்குப் பிடிக்க முடியாமல் படு தோல்வியடைந்து இனி மீள முடியுமா என்ற கேள்விக்குச் சென்று விட்டது.

    ஷமியும் பும்ராவும் சேர்ந்து 20 ஓவர்கள் ஆடி 89 ரன்கள் எடுக்கக் கூடிய பிட்சில் ஒட்டுமொத்த இங்கிலாந்து அணியும் 52 ஓவர்களில் காலியானது குறித்து இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் என்ன கூறுகிறார்?

    இங்கிலாந்தில் பல பேட்ஸ்மென்கள் பேட்டிங் கிரிப்பே சரியில்லை. சிப்லி முதல் இன்னிங்சில் அவுட் ஆன விதம், 2வது இன்னிங்சில் ரோரி பர்ன்ஸ் ஆட்டமிழந்த விதம், எல்லாம் இங்கிலாந்து பேட்டிங்கில் சீரியஸான பிரச்னை இருப்பதையே காட்டுகிறது.

    Also Read: எப்படியிருந்தாலும் 60 ஓவர்களில் இங்கிலாந்தை ‘ஃபினிஷ்’செய்வதே திட்டம்: விராட் கோலி பெருமிதம்

    முதல் இன்னிங்சிலேயே ஜோ ரூட் 180 அடிக்கவில்லையெனில் இந்த ஆட்டம் 4ம் நாளில் முடிந்திருக்கும்.

    இந்நிலையில் ஜோ ரூட் என்ன கூறுகிறார் என்றால், “ஓய்வறையில் பதற்றங்களை எப்படிக் கையாள்வது என்பதற்கு வழிமுறைகளை நாம் கண்டுப்பிடிக்க வேண்டும். வெறுப்பான தினமே. ஆனால் இன்னும் நிறைய கிரிக்கெட் ஆட வேண்டியுள்ளது, நிச்சயம் மீண்டு எழுந்து வருவோம்.

    Pls Read this: Lords test India win|ஆண்டர்சனுக்காக பழிதீர்க்கப் போய் பல்பு வாங்கிய இங்கிலாந்து: இந்திய ஆக்ரோஷத்துக்கு சரணடைந்து படுதோல்வி

    என் மீது அதிக சுமைகள், கேப்டனாக பொறுப்புகளைச் சுமக்க வேண்டியுள்ளது. உத்தி ரீதியாக இன்னும் வித்தியாசமாக ஏதாவது செய்திருக்கலாம். வெற்றிபெறும் நிலையிலிருந்து பின்னடைவு கண்டோம். சில விஷயங்களில் தவறுகள் செய்தோம், அதாவது வார்த்தை மோதல் உள்ளிட்டவை.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    ஷமி, பும்ரா சிறப்பாக ஆடினர். இதே போன்ற நிலையில் முன்பும் இருந்திருக்கிறோம். பிறகு டாப்-ஆக வந்திருக்கிறோம். பொறுமையைக் கடைப்பிடிப்போம், பாடங்களைக் கற்றுக் கொண்டு அடுத்த முறை தவறுகள் செய்யாமல் சிறப்பாக ஆட முயற்சி செய்வோம்” என்றார் ஜோ ரூட்.
    Published by:Muthukumar
    First published: