Lord's test: இங்கிலாந்து கொலாப்ஸ்- இந்தியா த்ரில் வின் - வீடியோ ஹைலைட்ஸ்

இந்தியாவுக்கு த்ரில் வெற்றி.- லார்ட்ஸ் டெஸ்ட்

லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் ஷமி, பும்ரா பேட்டிங்கிலும் பவுலிங்கிலும் அசத்த விக்கெட் விழாத தருணங்களில் உள்ளே புகுந்த சிராஜ் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்ற இந்திய அணி அபார வெற்றி பெற்றது இப்படித்தான்.. வீடியோவைப் பாருங்கள்.

  • Share this:
    லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் ஷமி, பும்ரா பேட்டிங்கிலும் பவுலிங்கிலும் அசத்த விக்கெட் விழாத தருணங்களில் உள்ளே புகுந்த சிராஜ் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்ற இந்திய அணி அபார வெற்றி பெற்றது இப்படித்தான்.. வீடியோவைப் பாருங்கள்.

    முதலில் 5ம் நாளில் அதிகம் எதிர்பார்த்த ரிஷப் பந்த் ஒருபவுண்டரியை இறங்கி வந்து ஆண்டர்சனை அடித்து விட்டு பிறகு ஆலி ராபின்சன் பந்தில் எட்ஜ் ஆனார். பிறகு இஷாந்த் சர்மாவும் காலியாக இந்தியா 8 விக்கெட்டுகளை இழந்தது, ஆனால் அதன் பிறகு பும்ரா,ஷமி கூட்டணி 20 ஓவர்கள் ஆடி அதிரடியாக 89 ரன்களைக் குவிக்க இங்கிலாந்துக்கு வெற்றி இலக்கு 271 ரன்களாக நிர்ணயிக்கப்பட்டது.



    ஆனால் பிறகு பவுலிங் போட வந்த இந்தியா அபாரமான நெருக்கடி கொடுத்து இங்கிலாந்தின் விக்கெட்டுகளை காலி செய்தது. ஜோ ரூட் மட்டுமே அதிக ரன்கள் எடுத்தார், இந்தியா தரப்பில் சிராஜ் இருமுறை ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார், இதில் மொயின் அலி, சாம் கரனை அடுத்தடுத்து வீழ்த்தி ஹாட்ரிக் வாய்ப்பு பெற்றார், ஆனால் ஹாட்ரிக் சாதனை நிகழ்த்த முடியவில்லை.

    பிறகு கடைசியில் ஒரே ஓவரில் பட்லர், ஜேம்ஸ் ஆண்டர்சனை வீழ்த்தி இங்கிலாந்தை 51.5 ஓவர்களில் ஆட்டமிழக்கச் செய்து 120 ரன்களில் சுருண்டது, இந்தியா அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என்று முன்னிலை பெற்றதோடு, ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 12 புள்ளிகளைப் பெற்றது, மொத்தம் 14 புள்ளிகளை இந்த 2 டெஸ்ட் போட்டிகளில் ஈட்டியுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Muthukumar
    First published: