கே.எல்.ராகுல் இப்படி ஆடி நான் பார்த்ததில்லை: புகழ்ந்து தள்ளும் ரோகித் சர்மா

ரோகித் சர்மா

கடினமான முதல் நாள் லார்ட்ஸ் பிட்சில் தன் திட்டங்களைத் துல்லியமாக நிறைவேற்றிய கே.எல்.ராகுல் இங்கிலாந்தை ஆதிக்கம் புரிந்து சதம் எடுத்தார் என்று அவருடன் ஆடிய ஹிட்மேன் ரோகித் சர்மா புகழ்ந்து தள்ளியுள்ளார்.

 • Share this:
  முதலில் ரோகித் சர்மா கொஞ்சம் ஆக்ரோஷமாக ஆட ராகுல் ஒருமுனையைத் தாங்கிப் பிடித்து 100 பந்துகளில் 16 ரன்களைத்தான் எடுத்திருந்தார், ரோகித் சர்மா 83 ரன்களில் ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்தில் கிளீன் பவுல்டு ஆனதையடுத்து ராகுல் தன் ஆட்டத்தை ஆடினார். முதல் பவுண்டரியே 41வது ஓவரில்தான் ராகுல் அடித்தார், அதுவும் மொயீன் அலி பந்தை மேலேறி வந்து சிக்ஸ் விளாசிய பந்தாகும் அது. பிறகு அவர் தன் பாணியில் பிரமாதமாக ஆடி 127 நாட் அவுட் என்று முதல் நாளை முடிக்க இந்திய அணி 276/3 என்று நல்ல முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை எட்டும் நிலைக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தார்.  ராகுலும் ரோகித்தும் சேர்ந்து முதல் விக்கெட்டுக்காக 126 ரன்களைச் சேர்த்தனர்.

  Also Read: கே.எல்.ராகுலை இனி அசைக்க முடியாது: புஜாரா எதிர்காலம்?- ஷுப்மன் கில் மீண்டும் வந்தால்

  இந்த இன்னிங்ஸ் குறித்து ரோகித் சர்மா கூறும்போது, “முதல் பந்திலிருந்தே கட்டுக்கோப்புடன் ஆடினார் ராகுல். ஆட்டம் முடியும் வரை முழு கட்டுப்பாட்டில் இருந்தார் ராகுல். எந்த ஒரு நிலையிலும் அவருக்குக் குழப்பமே இல்லை. அல்லது அதிகமாக அவர் யோசிக்கவும் இல்லை, பந்துக்கு ஆடினார். தன் திட்டத்தில் தெளிவாக இருந்தார். நாம் நம் திட்டங்களை நம்பி இறங்கும் போது வெற்றி பெறுவது சுலபம்.

  முதல் நாள் ஆட்டம் கே.எல்.ராகுலுக்குச் சொந்தமானது. அதை அவர் ஒவ்வொரு நிமிடமும் எண்ணத் தகுந்ததாக்கி விட்டார்.

  என்னுடைய இன்னின்ங்சை பொறுத்தவரை இது சிறந்த இன்னிங்ஸ் என்று கூற மாட்டேன், இன்னும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் சவால் ஆனது, நான் ஆடியதிலேயே சவால் ஆனது. ஆனால் நான் ஆடிய விதம் மகிழ்ச்சியளிக்கிறது. துரதிர்ஷ்டவசமாக அவுட் ஆனேன்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Also Read: Ind vs Eng|டாஸ் ஜெயிச்சுட்டு மேட்சைக் கோட்டை விடும் ஜோ ரூட்: இந்தியா அபார பேட்டிங்

  மயங்க் அகர்வால்தான் உண்மையில் ஆடியிருக்க வேண்டும், அவருக்கு மூளை அதிர்ச்சி ஏற்பட்டதால்தான் ராகுல் வந்தார். அதனால் அவருடன் இப்போதுதான் ஆடுகிறேன். களத்தில் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வது முக்கியம். நானும் கே.எல். ராகுலும் ஒத்த மனம் படைத்தவர்கள். கே.எல்.ராகுல் ஆடியதிலேயே சிறந்த இன்னிங்ஸ், நான் பார்த்ததில் சிறந்த இன்னிங்ஸ் இதுதான் என்று நினைக்கிறேன்” என்றார் ரோகித் சர்மா.
  Published by:Muthukumar
  First published: