• HOME
 • »
 • NEWS
 • »
 • sports
 • »
 • கே.எல்.ராகுலை இனி அசைக்க முடியாது: புஜாரா எதிர்காலம்?- ஷுப்மன் கில் மீண்டும் வந்தால்

கே.எல்.ராகுலை இனி அசைக்க முடியாது: புஜாரா எதிர்காலம்?- ஷுப்மன் கில் மீண்டும் வந்தால்

கே.எல்.ராகுலை இனி அசைக்க முடியாது

கே.எல்.ராகுலை இனி அசைக்க முடியாது

லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் சதம் எடுத்து 127 நாட் அவுட் என்று ஆடிவரும் கே.எல்.ராகுல் தான் ஒரு அருமையான தொடக்க வீரர் என்பதை கடினமான இங்கிலாந்து பிட்ச் உள்ளிட்ட சூழ்நிலைமைகளில் நிரூபித்து விட்டார். இனி அவரை அணியிலிருந்து நீக்குவதை நினைத்துக் கூட பார்க்க முடியாது. 

 • Share this:
  லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் சதம் எடுத்து 127 நாட் அவுட் என்று ஆடிவரும் கே.எல்.ராகுல் தான் ஒரு அருமையான தொடக்க வீரர் என்பதை கடினமான இங்கிலாந்து பிட்ச் உள்ளிட்ட சூழ்நிலைமைகளில் நிரூபித்து விட்டார். இனி அவரை அணியிலிருந்து நீக்குவதை நினைத்துக் கூட பார்க்க முடியாது.

  டி20, ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து கடினமான டெஸ்ட் போட்டிக்கு அருமையாக தன்னை தகவமைத்துக் கொண்டார் கே.எல்.ராகுல்.  பயிற்சி முதல்தர ஆட்டத்திலேயே மற்றவர்கள் திணற ராகுல் வந்து அனாயசமாக சதம் எடுத்து என்னை அணியில் எடு என்று நிர்பந்தித்தார்.

  நாட்டிங்கம் டெஸ்ட் போட்டியில் 84 மற்றும் 26 என்று கெத்து காட்டிய ராகுல், இந்த முறை பிரமாதமாக ஆடினார், முதல் 100 பந்துகளில் 16 ரன்களைத்தான் எடுத்திருந்தார், ஆண்டர்சன், ஆலி ராபின்சனின் ஸ்விங் பந்துகளுக்கு எதிராக உரத்த டெக்னிக்கை கடைப்பிடித்தார். 1952க்குப் பிறகு இங்கிலாந்தில் தொடக்க ஜோடி சதக்கூட்டணி அமைத்தது.

  5 சதங்கள் 12 அரைசதங்களுடன் கே.எல்.ராகுல் 37 டெஸ்ட் போட்டிகளில் 2,116 ரன்களை இதுவரை எடுத்துள்ளார்.

  கடைசியாக வெஸ்ட் இண்டீஸிற்கு எதிராக கிங்ஸ்டனில் 6 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த பிறகு இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெறவில்லை பார்ம் இன்மையும் காயமும் அவரை அணியிலிருந்து ஒதுக்கி வைத்தது.  இப்போது இங்கிலாந்தில் மீண்டும் அவர் வந்து இப்படி ஆடுவது ஷுப்மன் கில்லின் காயம் மறைமுக ஆசீர்வாதமாகவே தெரிகிறது. ஷுப்மன் கில்லுக்கு கே.எல்.ராகுல் அளவுக்கு பொறுமையும் டெக்னிக்கும் கிடையாது.

  ஆனாலும் ஒருவேளை ஷுப்மன் கில் மீண்டும் அணிக்குள் வந்தால் கோலிக்குச் சிக்கல்தான், ஆனால் ஒரு வழி இருக்கிறது, புஜாராவுக்குப் பதில் ராகுலை 3ம் நிலையில் இறக்கினால் பிரமாதமான ஒரு பேட்டிங் லைன் அப் இந்தியாவுக்கு கிடைக்கும்.

  ராகுல் நேற்று லார்ட்ஸ் கிங் ஆனார், கிரிக்கெட்டின் மெக்கா என்று கருதப்படும் லார்ட்ஸில் சதமெடுப்பது அனைவருக்குமான கனவு, கவாஸ்கர் லார்ட்ஸ் டெஸ்ட்டில் சதம் எடுத்ததில்லை. அது அவருக்கு ஒரு பெரும்குறையாக இருந்தது. பிறகு முதல் தர கிரிக்கெட்டில்தான் கவாஸ்கர் லார்ட்ஸில் சதம் எடுத்தார்.

  ராகுல்


  மாஸ்டர் பேட்ஸ்மென் சச்சின் டெண்டுல்கரும் டெஸ்ட் போட்டியில் அல்லாமல் எம்சிசி அணிக்கு எதிராக ரெஸ்ட் ஆப் த வேர்ல்ட் அணிக்கு 114 பந்துகளில் 125 ரன்களை விளாசி அசத்தினார் இது 1998ம் ஆண்டு. அப்போதெல்லாம் சச்சின் டெண்டுல்கர் அடித்து நொறுக்கும் பார்மில் இருந்தார், வெஸ்ட் இண்டீஸின் பயங்கர பவுலர் இயன் பிஷப்பை இறங்கி வந்து சிக்ஸ் விளாசியது அந்தப் போட்டியில் பலரையும் ஆச்சரியப்படுத்தியது.

  இந்திய வீரர்களில் வெங்சர்க்கார் லார்ட்ஸ் டெஸ்ட்டில் 3 சதங்கள் எடுத்து லார்ட்ஸ் கிங்காக திகழ்கிறார், இப்போது ராகுலுக்கு லார்ட்ஸ் கிங் ஆகும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ரகானே ஒருமுறை பிரமாதமான அதிரடி சதம் ஒன்றை லார்ட்ஸில் எடுத்தார், அது கிரீன் டாப் பிட்ச் அந்தப் போட்டியில் இந்தியா வென்றது. அதே போல் கே.எல்.ராகுல் சதம் எடுத்துள்ள இந்த டெஸ்ட் போட்டியிலும் லார்ட்சில் இந்தியா வெல்லும் என்பதற்கான அடித்தளத்தை ராகுல் அமைத்துக் கொடுத்துள்ளார்.

  கே.எல்.ராகுலை இனி டெஸ்ட் அணியிலிருந்து நீக்க முடியாது, ஏனெனில் கடினமான சூழ்நிலையில் சதம் எடுப்பது ராகுலின் ஒரு பேட்டிங் திறமையாகும். எனவே ராகுல் நீடித்தால் புஜாரா இடம் காலியாகும். புஜாராவும் சரியாக ஆடுவதில்லை. அரைசதம் எடுத்தே நீண்ட காலமாகிறது. மேலும் சூரியகுமார் யாதவ், பிரிதிவி ஷா போன்றோரும் பெஞ்சில் காத்திருக்கின்றனர்.

  இந்த நிலையில் மிகவும் போட்டி சூழ்ந்த இந்திய டெஸ்ட் அரங்கில் கேஎல் ராகுல் தன் இடத்தை நிலை நிறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Muthukumar
  First published: