அரசியலால் பிரிந்து நிற்கும் கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் குடும்பம்!

#LokSabhaElections2019: Sister, father in #Congress, cricketer #Jadeja backs #BJP | ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா கடந்த மார்ச் மாதம் பாஜகவில் சேர்ந்தார்.

news18
Updated: April 16, 2019, 11:54 AM IST
அரசியலால் பிரிந்து நிற்கும் கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் குடும்பம்!
ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா. (Twitter/BCCI)
news18
Updated: April 16, 2019, 11:54 AM IST
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவின் குடும்பம் அரசியலால் பிரிந்து கிடக்கிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி ஆல்ரவுண்டராக வலம் வருபவர் ரவீந்திர ஜடேஜா. ஐ.பி.எல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் அவர், நேற்று அறிவிக்கப்பட்ட உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார்.

குஜராத் மாநிலம் ஜாம்நகரைச் சேர்ந்தவர் ரவீந்திர ஜடேஜா. அவரது ரிவாபா கடந்த மார்ச் மாதம் பாஜகவில் சேர்ந்து மக்களவைத் தேர்தலில் அந்தக் கட்சிக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்துவருகிறார். ஜடேஜாவின் தந்தையும், சகோதரியும் கடந்த வாரம் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.


rivaba jadeja, ரிவாபா ஜடேஜா
பாஜகவில் இணைந்த ரிவாபா ஜடேஜா.


இந்நிலையில், தான் பாஜக-வுக்கு ஆதரவளிப்பதாக ஜடேஜா தனது ட்விட்டர் பக்கத்தில் அக்கட்சியின் சின்னத்தை பதிவிட்டு வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். இதன்மூலம், அவரது குடும்பம் அரசியலால் பிரிந்து கிடக்கிறது.ஜடேஜா பாஜகவில் சேர்ந்ததைத் தொடர்ந்து, பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “நன்றி ஜடேஜா, உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடும் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டதற்கு வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.பெங்களூருவை வீழ்த்தி புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடம் பிடித்தது மும்பை அணி!
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 16, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...