ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

2 மாதங்களில் இரண்டு நாட்டிற்கு விளையாடிய கிரிக்கெட் வீரர்! எப்படி அணி மாறினார் தெரியுமா?

2 மாதங்களில் இரண்டு நாட்டிற்கு விளையாடிய கிரிக்கெட் வீரர்! எப்படி அணி மாறினார் தெரியுமா?

லோகன் வான் பீக்

லோகன் வான் பீக்

ங்கிலாந்து அணிக்கு உலககோப்பை வாங்கி கொடுத்த இயன் மார்கன் முதலில் அயர்லாந்து அணிக்காக தான் விளையாடினார்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலககோப்பை தொடரில் இரண்டு மாதங்களில் இரண்டு நாடுகளுக்கு விளையாடியுள்ள வீரரின் செய்தி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

  சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் சிலர் தங்களது சொந்த நாட்டிற்கு விளையாடமால் வெளிநாட்டு அணிக்கு விளையாடி வருகின்றனர். காரணம் அவர்களுக்கு சொந்த நாட்டில் அங்கீகாரம் கிடைத்து இருக்காது, அல்லது கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி விளையாட வேண்டும் என்பதற்காக தங்களது சொந்த நாட்டிற்கு  விளையாடமால் மற்ற நாட்டில் கிடைத்த வாய்ப்பின் பேரில் விளையாடியது உண்டு.

  உதாரணமாக இங்கிலாந்து அணிக்கு உலககோப்பை வாங்கி கொடுத்த இயன் மார்கன் முதலில் அயர்லாந்து அணிக்காக தான் விளையாடினார். அதன்பிறகு தான் அவரின் திறமையை வைத்து இங்கிலாந்து அணிக்கு விளையாட வாய்ப்பு கிடைத்தது.

  இதையும் படிங்க: தோனி தொடங்கி வைத்த வெற்றி! டி20 உலகக்கோப்பையில் இதுவரை வென்ற நாடுகள்!

  அப்படி தான் ஒரு வீரர் நியூசிலாந்து அணிக்காக கடந்த 2 மாதங்களுக்கு விளையாடி தற்போது நெதர்லாந்து அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி இந்தியா ஏ அணிக்கு எதிராக விளையாடிய லோகன் வான் பீக் தற்போது இரண்டு மாதங்கள் கழித்து ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலககோப்பை தொடரில் நெதர்லாந்து அணிக்காக லோகன் வான் பீக் விளையாடி வருகிறார்.
   
  View this post on Instagram

   

  A post shared by Logan van Beek (@loganvanbeek)  கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையில் நடைபெற்ற இந்தியா ஏ அணிக்கு எதிரான போட்டியில் விளையாடியதும் அவருக்கு  சென்னையில் ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  Published by:Arunkumar A
  First published:

  Tags: Netherlands, New Zealand, T20 World Cup