ஆளில்லா மைதானத்தில் சிக்ஸ் அடித்தால் இதுதான் நிலை... ஃப்ல்டரின் பரிதாப நிலை - வைரல் வீடியோ

ஆளில்லா மைதானத்தில் சிக்ஸ் அடித்தால் இதுதான் நிலை... ஃப்ல்டரின் பரிதாப நிலை - வைரல் வீடியோ
  • Share this:
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஆளில்லா மைதானத்தில் போட்டிகள் நடைபெற்றாலும் வீரர்களுக்கு அது சோர்வை தான் ஏற்படுத்தும்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சர்வதேச விளையாட்டு போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருவதால் வரும் 29-ம் தேதி தொடங்கவிருந்த ஐ.பி.எல் தொடர் ஏப்ரல் 15-ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதேப் போன்று இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான அடுத்த 2 ஒரு நாள் போட்டி மைதானத்தில் ரசிகர்கள் இல்லாமல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் வீரர்கள் பவுண்டரி, சிக்சர், விக்கெட் எடுக்கும்போது ரசிகர்கள் ஆரவாரம் எழுப்பி ரசிகர்களை உற்சாகப்படுத்துவார்கள். ஆனால் அதுபோன்று எதுவுமின்றி போட்டிகள் நடைபெற உள்ளது.


சிட்னி மைதானத்தில் இன்று நடைபெற்ற ஆஸ்திரேலியா - நியூசிலாந்து போட்டியும் கொரோனா அச்சுறுத்தலால் ரசிகர்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. இந்தப் போட்டியின் போது ஆஸ்திரேலிய வீரர் அடித்த சிக்சரால் பந்து கேலரிக்கு சென்றது. ரசிகர்கள் இல்லாததால் நியூசிலாந்து ஃப்ல்டர் கேலரிக்கு சென்று பந்தை தேடிப்பிடித்து எடுத்தார்.இந்த வீயோவை இ.எஸ்.பி.என் கிரிக்இன்போ தனது ட்விட்டர் பகிர்ந்துள்ளது. மேலும் ரசிகர்கள் இல்லாததாது மிகவும் கஷ்டம் தான் என்று பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோவிற்கு பலரும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
First published: March 13, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading