ஊரடங்கு: சானியா மிர்சாவைச் சந்திக்க இந்தியா வருவதற்கு சோயப் மாலிக்கிற்கு சிறப்பு அனுமதி

கொரோனா ஊரடங்கு காரணமாக ஐந்து மாதங்களாய் தன் மனைவி சானியா மிர்சாவைச் சந்திக்க முடியாததால் சோயப் மாலிக்கிற்கு சிறப்பு அனுமதி வழங்கியுள்ளது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்.

கொரோனா ஊரடங்கு காரணமாக ஐந்து மாதங்களாய் தன் மனைவி சானியா மிர்சாவைச் சந்திக்க முடியாததால் சோயப் மாலிக்கிற்கு சிறப்பு அனுமதி வழங்கியுள்ளது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்.

  • Share this:
சோயப் மாலிக் அவரது நாட்டில் பாகிஸ்தான் பிரீமியர் லீக் தொடரில் விளையாடிக் கொண்டிருந்தார். சானியா மிர்சா சர்வதேச  டென்னிஸ் தொடரை முடித்துவிட்டு மகனுடன் இந்தியாவில் தங்கியிருந்தார். இந்நிலையில் கொரோனோ பரவலால் இரு நாடுகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் இருவரும் கடந்த ஐந்து மாதங்களாக சந்திக்க முடியாமல் போனது.

இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ள பாகிஸ்தான் அணி  வரும் 28ம் தேதி சிறப்பு விமானம் மூலம் புறப்படவுள்ளது. 29 நபர்கள் கொண்ட அணியில் சோயப் மாலிக் இடம்பிடித்துள்ளார். இருப்பினும் கடந்த ஐந்து மாதங்களாகத் தனது குடும்பத்தை விட்டு பிரிந்திருப்பதால் எனது மனைவியையும், மகனையும் சந்திக்க சிறப்பு அனுமதி கோரியுள்ளார். இதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அனுமதி வழங்கியுள்ளது.

Also see:

பாகிஸ்தான் வீரர்கள் இங்கிலாந்து சென்றவுடன் நான்கு வாரம் தனிமைப்படுத்தப்படவுள்ளனர். இதிலிருந்து சோயப் மாலிக்கிற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் மாலிக் இந்தியா சென்று குடும்பத்தைச் சந்தித்து விட்டு ஜூலை 24ம் தேதி இங்கிலாந்து திரும்ப அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கிடையே ஆகஸ்ட் - செப்டம்பர் மாதங்களில் 3 டெஸ்ட், 3 டி20 போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Published by:Rizwan
First published: