லாக்டவுன் மெண்டல்ஸ்; தோனி குறித்த வதந்திக்கு சாக்ஷி பதிலடி

Sakshi Dhoni | இந்திய அணியில் தோனி இடம் பெறாமல் இருந்தாலும் அவர் தொடர்பான செய்திகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

லாக்டவுன் மெண்டல்ஸ்; தோனி குறித்த வதந்திக்கு சாக்ஷி பதிலடி
சாக்ஷி தோனி
  • Share this:
மகேந்திர சிங் தோனி கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார் என வெளியான வதந்திக்கு சாக்ஷி கட்டமான பதிலளித்த சில நிமிடங்களில் அந்த பதிவை நீக்கி விட்டார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி 2019 உலகக்கோப்பை அரையிறுதிக்கு பின் இந்திய அணியில் இடம்பெறாமல் உள்ளார். ஐசிசி-யின் 3 உலகக்கோப்பைகளையும் இந்திய அணிக்கு வென்று தந்த தந்த ஒரே கேப்டன் என்ற பெருமை படைத்தவர் தோனி.

இந்திய அணியில் தோனி இடம் பெறாமல் இருந்தாலும் அவர் தொடர்பான செய்திகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஐ.பி.எல் தொடரில் அவரது ஆட்டத்தை பார்க்க ரசிகர்கள் ஏக்கத்தில் இருந்தனர். ஆனால் கொரோனா வைரஸ் காரமணாக ஐ.பி.எல் தொடர் எப்போது நடைபெறும் என்பது கேள்விகுறியாகவே உள்ளது.


அதே நேரம் உலகளவில் கொரேனா வைரஸ் அச்சுறுத்தி வருவதால்ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பையும் 2022-ம் ஒத்திவைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனால் டி20 உலகக்கோப்பை போட்டியில் தோனி பங்கேற்பாரா என்ற சந்தேகம் வலுத்துள்ளது.

இந்நிலையில் நேற்று மாலை #DhoniRetires என்ற ஹேஸ்டெக் ட்விட்டரில் ட்ரெண்டாகி உள்ளது. இதனால் சர்வசேத கிரிக்கெட் போட்டியிலிருந்து தோனி ஓய்வு பெற்றுவிட்டார் என்று பரபரப்பு கிளம்பியது. அடுத்த சில நிமிடங்களில் இதற்கு பதிலளிக்கும் வகையில் சாக்ஷி கட்டமாக பதிவிட்டிருந்தார்.

அதில், லாக்டவுனால் மக்கள் மனதளவல் நிலையற்ற தன்மையை ஏற்படுத்தி உள்ளது. வாழ்க்கையில் உருப்புடியாக ஏதாவது செய்யுங்கள் என்றுள்ளார்.ஆனால் அடுத்த சில நிமிடங்களில் சாக்ஷி அந்த பதிவை நீக்கிவிட்டார். #DhoniRetires என்ற ஹேஸ்டேகால் கோபமடைந்துள்ள தோனி ரசிகர்கள் தற்போது #DhoniNeverTires என்ற ஹேஸ்டேகை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
First published: May 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading