• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • West Indies vs Bangladesh- பாதி ஆட்டத்தில் திடீரென பொலார்ட் வெளியேறினார்

West Indies vs Bangladesh- பாதி ஆட்டத்தில் திடீரென பொலார்ட் வெளியேறினார்

வங்கதேசத்துக்கு எதிராக பாதியிலேயே வெளியேறிய பொலார்டு

வங்கதேசத்துக்கு எதிராக பாதியிலேயே வெளியேறிய பொலார்டு

  • Share this:
    ஷார்ஜாவில் நடைபெறும் மே.இ.தீவுகள் - வங்கதேச அணிகளுக்கு இடையிலான டி20 உலகக்கோப்பைப் போட்டியில் புரியாத புதிர் சம்பவங்கள் நடைபெறுகின்றன. கேப்டன் கெய்ரன் பொலார்டு இறங்கி ஆடிவந்த நிலையில் 16 பந்துகளில் 8 ரன்கள் எடுத்த நிலையில் திடீரென ரிட்டையர்டு ஆகி பெவிலியன் திரும்பினார். ஏன், எதற்கு என்று இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை.

    கிரிக் இன்போ லைவ் வர்ணனையில் காயமா, அல்லது மைதானத்தில் நிலவும் வெப்பமா, அல்லது அவருக்கு உடல் நலம் சரியில்லையா என்று எதுவும் தெரியவில்லை. இது மே.இ.தீவுகளுக்கு பெரிய அடியாகப் போயுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணி 99 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து பரிதவித்து வருகிறது. நிகோலஸ் பூரன் 2 சிக்ஸ் ஒரு பவுண்டரியுடன் 24 ரன்கள் எடுக்க, ராஸ்டன் சேஸ் 34 ரன்கள் எடுத்து ஆடிவருகின்றனர்.

    டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் வெஸ்ட் இண்டீஸ் அணியை பேட் செய்ய அழைத்தது, அதுமுதல் அந்த அணிக்கு நேரம் சரியாக இல்லை. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு தொடக்கமே சரியில்லை, கிறிஸ் கெய்ல் 10 பந்துகள் ஆடி 4 ரன்களுக்கு தட்டுத்தடுமாறி கடைசியில் மெகதி ஹசன் பந்தில் பவுல்டு ஆனார். எவின் லூயிஸ் 6 ரன்கள் எடுத்து முஷ்பிகுர் ரஹீமிடம் கேட்ச் ஆகி முஸ்தபிசுர் ரஹ்மானிடம் வெளியேறினார்.

    போலார்டு 8 ரன்களில் பவுண்டரி எதுவும் அடிக்காமல் திடீரென களத்திலிருந்து பெவிலியன் திரும்பினார் அவருக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை, ஒருவேளை இனி இறங்குவாரா என்பதும் தெரியவில்லை. ஷிம்ரன் ஹெட்மையரும் ஒருபவுண்டரியோடு 9 ரன்களில் மெஹதி ஹசன் பந்தில் வெளியேறினார். எல்லாவற்றுக்கும் மேலாக ஆந்த்ரே ரஸல் பாவம் ரன்னர் முனையில் பவுலர் கையில் பட்டு ஸ்டம்பைத் தாக்க கிரீசுக்கு வெளியே இருந்ததால் ரன் அவுட் ஆனார். ரஸல் டக் அவுட்.

    மே.இ.தீவுகள் கடந்த முறை சாம்பியன் என்பதை மறந்து விட்டு ஆடுவது போல் தெரிகிறது, பிரமாதமான அதிரடி அணி இப்படி வீணாகப்போவது உண்மையில் மே.இ..தீவுகளின் தீவிர ரசிகர்களுக்குச் சோகத்தையே ஏற்படுத்தும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: