ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

தோனியின் மகள் ஷிவாவுக்கு அன்பு பரிசு அனுப்பிய மெஸ்ஸி

தோனியின் மகள் ஷிவாவுக்கு அன்பு பரிசு அனுப்பிய மெஸ்ஸி

ஷிவா தோனி

ஷிவா தோனி

7வயதான ஷிவா சிங் தோனியை போல மெஸ்ஸியின் தீவிர ரசிகை. இதனால் மெஸ்ஸியிடம் இருந்து ஷிவாவுக்கு பிரத்யேக் பரிசு ஒன்று வந்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மெஸ்ஸி தனது கையொப்பமிட்ட அர்ஜென்டினா ஜெர்ஸியை தோனியின் மகள் ஸிவாவுக்கு அனுப்பியுள்ள புகைப்படத்தை தோனியின் மனைவி சாக்‌ஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கத்தாரில் நடைபெற்ற உலக கோப்பை கால்பந்து இறுதி போட்டியில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா. மேலும் மெஸ்ஸி தனது கையெழுத்தயிட்ட ஜெர்ஸியை பிசிசிஐ பொதுச்செயலாளர் ஜெய் ஷாவுக்கு அனுப்பி இருந்தார். அந்த வரிசையில் கிரிக்கெட் வீரர் தோனியின் மகளுக்கு தனது கையெழுத்திட்ட ஜெர்ஸியை அனுப்பியுள்ளார் மெஸ்ஸி.
 
View this post on Instagram

 

A post shared by ZIVA SINGH DHONI (@ziva_singh_dhoni)7வயதான ஷிவா சிங் தோனியை போல மெஸ்ஸியின் தீவிர ரசிகை. இதனால் மெஸ்ஸியிடம் இருந்து ஷிவாவுக்கு பிரத்யேக் பரிசு ஒன்று வந்துள்ளது. மெஸ்ஸி தன்னுடைய அர்ஜென்டீனா ஜெர்ஸியில் PARA ZIVA (ஷிவாவிற்காக) என போர்ச்சுகல் மொழியில் எழுதி அதன் கீழ் கையெழுதிட்டு தந்துளளார். இதுகுறித்த புகைப்படம், ஷிவா சிங் தோனி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவாகியுள்ளது. அதனை ஆசையுடன் ஸிவா அணிந்துகொண்டு 'அப்பாவை போலவே மகளும்' என கேப்ஷன் கொடுத்துள்ளார்.

First published:

Tags: Lionel Messi, Ziva Dhoni