2018-ல் ஆஸ்திரேலியா அணி தென் ஆப்பிரிக்கா சென்ற போது பந்தை உப்புக் காகிதம் போட்டு விதிகளை மீறி யாருக்கும் தெரியாமல் தேய்த்ததாக ஆஸ்திரேலிய தொடக்க வீரர் பாங்கிராப்ட் தொலைக்காட்சியில் பிடிபட்டார், நிரூபணமானது பின்னணியில் அப்போதைய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், வார்னர் இருந்தது ஆதாரபூர்வமாக மூவரையும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா த்டை செய்தது, அந்தத் தடை முடிவுக்கு வந்து மூவரும் கிரிக்கெட் ஆடி வருகிறார்கள், ஆனால் அவர்கள் இனி ஆஸ்திரேலியாவுக்கு எந்த அணிக்கும் தலைமை வகிக்க முடியாது என்ற தடை இருந்து வருகிறது.
இந்தத் தடையை ஸ்மித், வார்னர் மீது நீக்க வேண்டுமென்று ஆஸ்திரேலியாவில் முன்னாள் வீரர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஷேன் வார்ன், கிரெக் சாப்பல் போன்றோர் ஸ்மித் மீதான தடையை இறக்க வேண்டும் என்று வலியுறுத்தும் வேளையில் முன்னாள் கேப்டன் ஆலன் பார்டர், டேவிட் வார்னர் மீதான தலைமைத்துவ தடையை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் கேப்டனாக இருக்கும் ஏரோன் பிஞ்ச் உலகக்கோப்பை டி20-யை வென்றாலும் வார்னரை கேப்டானாக்க வேண்டும், அல்லது ஸ்மித்தை கேப்டனாக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் அங்கு வலுத்துள்ளன.
இந்நிலையில் வார்னருக்கு வக்காலத்து வாங்கும் ஆலன் பார்டர் கூறியதாவது:
முதலில் பால் டேம்பரிங்கிற்கு மிகவும் கடும் தண்டனை இது. அதை அவர்கள் அனுபவித்தும் விட்டார்கள். இவர்கள் செய்து பிடிபட்டனர், மற்றவர்கள் செய்கின்றனர் இன்னும் பிடிபடவில்லை. உலகின் எந்த கேப்டனாவது தன் நெஞ்சின் மீது கைவைத்து பந்தை சேதம் செய்யவில்லை என்று கூற முடியுமா? அப்படிக் கூறினால் அது பச்சைப் பொய் என்பதைத் தவிர வேறென்ன?
குற்றத்தையும் மீறிய தண்டனையாகி விட்டது. கிரிக்கெட் சகோதரத்துவத்திடையே உள்ள அறிவுநிலையைப் பார்க்கும் போது கிரிக்கெட் பற்றிய எண்ணங்களை நாம் மாற்றிக்கொள்ள வேண்டும். இயற்கையாக பந்தை சற்றே சேதம் செய்வது அனுமதிக்கப்பட வேண்டும், உப்புக் காகிதம், சோடா மூடி போன்றவை அல்லாமல் இயற்கையான பந்தை சேதம் செய்தல் அனுமதிக்கப்பட வேண்டும்.
ஏனெனில் ரிவர்ஸ் ஸ்விங் நம்மிடம் உள்ள மிகப்பெரிய சாதனம். பந்தைக் கையால் கொஞ்சம் மாற்றியமைத்து ரிவர்ஸ் ஸ்விங் எடுக்க வைத்தால் அதில் தவறென்ன இருக்கிறது? பேட்டிங் பிட்ச்களாக எல்லோரும் போட்டுத்தள்ளும் நேரத்தில் ரிவர்ஸ் ஸ்விங் இருந்தால் என்ன கெட்டு விடும்? பந்து வீச்சே எடுக்காத பிட்சில் நல்ல பேட்டர்களை வீழ்த்துவது கடினம், ரிவர்ஸ் ஸ்விங் அவசியம் அதற்கு பந்தை கொஞ்சம் இயற்கையான முறையில் மாற்றுவது அனுமதிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு கூறுகிறார் ஆலன் பார்டர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: David Warner, Steve Smith