நாட்டை விட்டு வெளியேறி இந்திய வீரர்களுடன் இணையும் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்

இந்திய வீரர்களுடன் இணையும் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்

இங்கிலாந்து அணி 2019-ம் ஆண்டில் உலகக் கோப்பையை வெல்வதற்கு முக்கியமாக இருந்த ஆல்-ரவுண்டர், அதன்பின் எந்த ஒரு சர்வதேச போட்டிகளிலும் விளையாடவில்லை.

 • Share this:
  இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2019 உலகக் கோப்பை இறுதிப்போட்டியை யாராலும் மறக்க முடியாது. எந்த ஒரு உலகக் கோப்பை இறுதி போட்டியும் இல்லாத அளவிற்கு மிகவும் பரபரப்பாக அமைந்தது. சூப்பர் ஓவரிலும் போட்டி டிரா செய்யப்பட்டதால் பவுண்டரிகள் அடிப்படையில் இங்கிலாந்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. முதன்முறையாக இங்கிலாந்து உலகக் கோப்பையை வென்றதற்கு ஆல்-ரவண்டர் லியாம் பிளங்கெட்டிற்கு மிகப் பெரிய பங்கு உள்ளது.

  உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பந்துவீசிய லியாம் பிளங்கெட் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் உட்பட 3 முக்கிய விக்கெட்களை வீழ்த்தினார். அந்தப் போட்டிக்கு லியாம் பிளங்கெட் எந்த சர்வசேத போட்டியில் விளையாடவில்லை. 36 வயதான பிளங்கெட் 89 ஒரு நாள் போட்டிகளில் 646 ரன்கள் மற்றும் 135 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார். 13 டெஸ்ட் போட்டி மற்றும் 22 டி20 போட்டியிலும் இங்கிலாந்து சார்பாக விளையாடி உள்ளார்.

  இந்நிலையில் லியாம் பிளாங்கெட் அமெரிக்கா கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து நாட்டை விட்டு வெளியேறி உள்ளார். அமெரிக்காவில் நடைபெற உள்ள டி20 மேஜர் லீக் கிரிக்கெட்டில் அவர் விளையாட உள்ளார். உன்முக்த் சந்த் உட்பட பல இந்திய வீரர்களும் இந்த லீக் தொடரில் பங்கேற்க உள்ளனர். பிளங்கெட்டின் மனைவி இமலேஹாவும் ஒரு அமெரிக்கர் ஆவார்.

  கடந்த 3 ஆண்டுகளாக எனக்கு ஆதரவளித்த சர்ரேவில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் நன்றி. நான் இங்கிலாந்தில் ஒரு அற்புதமான வாழ்க்கையை அனுபவித்துள்ளேன், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, அமெரிக்காவில் விளையாட்டிலும், பயிற்சியிலும் விளையாட்டை ஊக்குவிக்க உதவியதில் நான் மகிழ்ச்சியடைகிறேன் என்று பிளங்கெட் தெரிவித்துள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vijay R
  First published: