“ஏப்ரல்ல வா.. உன்ன வச்சுக்கிறேன்“ நியூசிலாந்து வீரரின் லந்துக்கு பதிலடி கொடுத்த கே.எல்.ராகுல்

“ஏப்ரல்ல வா.. உன்ன வச்சுக்கிறேன்“ நியூசிலாந்து வீரரின் லந்துக்கு பதிலடி கொடுத்த கே.எல்.ராகுல்
IND vs NZ
  • Share this:
நியூசிலாந்து வீரர் ஜேம்ஸ் நீஷமின் கேலியான பதிவிற்கு இந்திய அணி வீரர் கே.எல்.ராகுல் பதிலடி கொடுத்துள்ளார்.

நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20 தொடரை முழுமையாக கைப்பற்றியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஒரு நாள் தொடரை நியூசிலாந்து முழுமையாக கைப்பற்றியது.

இந்த தொடரின் 3வது ஒரு நாள் போட்டியில் கே.எல்.ராகுல் மற்றும் ஜேம்ஸ் நீஷமிற்கு இடையே வாக்குவாதம் நடைபெற்றது. இந்தப் போட்டியின் 20வது ஓவரை ஜேம்ஸ் நீஷம் வீசினார். அப்போது கே.எல்.ராகுல் சிங்கிள் அடித்து வேகமாக ரன் எடுக்க முயற்சித்த போது நீஷம் நடுவில் நின்று அவருக்கு இடையூறு ஏற்படுத்தினார்.


இதனால் சற்று ஆவேசமான கே.எல்.ராகுல் அவரிடம் வாக்குவாதம் செய்தார். இதனால் லேசான சலசலப்பு ஏற்பட்டது. இவர்கள் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபடும் புகைப்படத்தை தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ள நஷீம், அதில் Paper, scissors, rock? என்று சிறுவர்கள் விளையாடும் போட்டி என கேலியாக பதிவு செய்துள்ளார்.



இதற்கு பதிலளித்துள்ள கே.எல்.ராகுல், ஏப்ரல் மாதம் இதை தீர்ப்போம். அப்போது உங்களை பார்து கொள்கிறேன்“ என்றும் பதிவு செய்துள்ளார்.



ஏனென்றால் ஐ.பி.எல் தொடரில் பஞ்சாப் அணியின் கேப்டனாக கே.எல்.ராகுல் செயல்பட உள்ளார். அந்த அணியின் கேப்டன் அஸ்வின் டெல்லி அணிக்கு மாறி உள்ளதால் கே.எல்.ராகுல் கேப்டன் பொறுப்பை ஏற்க உள்ளார்.

அதே அணியில் தான் ஜேம்ஸ் நீஷம் விளையாட உள்ளார். ஜேம்ஸ் நீஷமை பஞ்சாப் அணி 50 லட்சம் ரூபாய் கொடுத்து ஏலம் எடுத்துள்ளது. இவர்களது பதிவு இணையத்தில் வைரலாகி உள்ளது.
First published: February 12, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading