Home /News /sports /

லெஜண்ட்கள் தோனி-யுவராஜ் திடீர் சந்திப்பு- பழைய நினைவுகளில் மூழ்கிய ரசிகர்கள்

லெஜண்ட்கள் தோனி-யுவராஜ் திடீர் சந்திப்பு- பழைய நினைவுகளில் மூழ்கிய ரசிகர்கள்

தோனி-யுவராஜ் சிங்

தோனி-யுவராஜ் சிங்

யுவராஜ் சிங் தன் இன்ஸ்டாகிராம் சமூக ஊடகத் தளத்தில் தோனியுடன் திடீர் சந்திப்பு மேற்கொண்டதை பகிர்ந்துள்ளார். ரசிகர்கள் பழைய நினைவலைகளில் ஆனந்தக் கண்ணீருடன் இந்த சந்திப்பை அசைப்போட்டு வருகின்றனர்.

    யுவராஜ் சிங் தன் இன்ஸ்டாகிராம் சமூக ஊடகத் தளத்தில் தோனியுடன் திடீர் சந்திப்பு மேற்கொண்டதை பகிர்ந்துள்ளார். ரசிகர்கள் பழைய நினைவலைகளில் ஆனந்தக் கண்ணீருடன் இந்த சந்திப்பை அசைப்போட்டு வருகின்றனர்.

    பல கிரிக்கெட் போர்க்களங்களை கண்ட இருவருமே ஒருவிதத்தில் இந்திய அணியின் வெற்றிகரமான பினிஷர்களே, பேட்டிங்கில் யுவராஜ் கொஞ்சம் பெரிய பேட்ஸ்மென் தான். 2011 உலகக்கோப்பை இறுதியில் யுவராஜ் இறங்க வேண்டிய இடத்தில்தான் கேப்டன் தோனி இறங்கி பெயரைத் தட்டிச்சென்றார்.

    இருவரும் பெரிய நண்பர்கள், மனஸ்தாபங்கள் இருந்தாலும் களநட்பை மறக்க முடியுமா? இருவரும் சேர்ந்து ஆடிய பல போட்டிகளை இருவராலும் மறக்க முடியுமா? கிரிக்கெட் ஒரு பெரிய லெவலர் அதாவது சமனி என்று கூறப்படுவதுண்டு, இங்கு என்ன வித்தியாசங்களும் கருத்து வேறுபாடுகளும் நட்பின் முன்னால் சூரியனைக் கண்ட பனி போல் விலகி விடுவதுதான் வழக்கம்.

    இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் இருவரும் சமீபத்தில் சந்தித்து பேசி உள்ளனர். ஒரு விளம்பரப் பட ஷூட்டிங்கில் ஈடுபட்டிருந்த போது அவர்கள் இருவரும் சந்தித்து கொண்டனர்.

    அந்த வீடியோ பதிவை யுவராஜ் சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் பதிவிட்டுள்ள இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், டோனியுடன் யுவராஜ் சிங் அமர்ந்து உரையாடிக் கொண்டிருக்கிறார். இந்த பதிவு கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் பெரிய பழைய நினைவலைகளையும் நினைவு ஏக்கங்களையும் கிளறியுள்ளது.

    டோனியின் தலைமையின் கீழ் யுவராஜ் சிங் 104 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார். அதிலும் குறிப்பாக, 2011ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரை கிரிக்கெட் ரசிகர்களால் மறக்கவே முடியாது. இந்திய அணி உலக கோப்பையை வெல்ல யுவராஜ் சிங்கின் பங்களிப்பு மிக முக்கியமானது. இதன் காரணமாக, 2011 உலக கோப்பை தொடரில், அவருக்கு தொடர் நாயகன் விருது அளிக்கப்பட்டது.

    இதோ வீடியோ:



    அந்த உலக கோப்பை இறுதிப்போட்டியில், இமாலய சிக்சர் அடித்து, இந்திய அணியின் உலகக்கோப்பை கனவை நனவாக்கிய கேப்டன் எம்.எஸ்.டோனி ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.

    கிரிக்கெட் மைதானத்தில் உலக கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்ட எம் எஸ் தோனி -யுவராஜ் சிங் ஜோடியை இனி கிரிக்கெட் களத்தில் காண்பது என்பது சாத்தியமற்ற நிகழ்வு, அதனால் இருவரையும் அருகருகே வீடியோவில் பார்த்த ரசிகர்கள் உண்மையில் நெகிழ்ந்து போயுள்ளனர்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: MS Dhoni, Yuvraj singh

    அடுத்த செய்தி