இந்திய அணியுடன் உண்மையில் பயிற்சியாளராக பணியாற்ற விருப்பம் தெரிவித்தவர் விவிஎஸ். லஷ்மண் தான் என்று சவுரவ் கங்குலி இப்போது தெரிவித்துள்ளார்.
ரவிசாஸ்திரிக்குப் பிறகு ராகுல் திராவிட் இந்தியாவின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றுள்ளார். ஆனால் ராகுல் திராவிட் தேசிய கிரிக்கெட் அகாடமியே போதும் என்று கூறினார், கங்குலி, ஜெய்ஷா வற்புறுத்தி ராகுல் திராவிட்டை தலைமைப் பயிற்சியாளர் பொறுப்புக்கு சம்மதிக்க வைத்துள்ளனர்.
ஆனால் நேர் காணல் ஒன்றில் கங்குலி கூறிய போது உண்மையில் இந்திய அணியுடன் பயிற்சியாளராகப் பணியாற்ற விரும்பியவர் விவிஎஸ். லஷ்மண் தான் என்று வெளிப்படையாகக் கூறியுள்ளார்.
“நாங்கள் நீண்ட காலமாக தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிற்கு ராகுல் திராவிடைத்தான் மனதில் நினைத்திருந்தோம். ஆனால் அவர் நீண்ட காலம் குடும்பத்தை விட்டுப் பிரிந்து இருக்க வேண்டும் இது சாத்தியமல்ல என்று மறுத்துக் கொண்டே வந்தார். ஏனெனில் தலைமைப் பயிற்சியாளர் என்றால் அணியுடன் தொடர்ச்சியாக ஆண்டுக்கு 8-9 மாதங்கள் இருக்க நேரிடும். ராகுல் திராவிடுகு இரு இளம் குழந்தைகள் உள்ளனர்.
விவிஎஸ் லஷ்மண் தான் உண்மையில் இந்திய அணியின் பயிற்சியாளராக விரும்பினார். அது எப்படியோ வேலைக்கு ஆகாமல் போய் விட்டது, ஆனால் எதிர்காலத்தில் லஷ்மண் இந்திய அணியின் கோச் ஆக நிறைய வாய்ப்பிருக்கிறது. இப்போது லஷ்மண் இளம் தலைமுறை வீரர்களை வளர்த்தெடுக்கும் தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலிமைப் பொறுப்பில் இருக்கிறார்” என்றார் கங்குலி.
Also Read: பாஜகவின் இந்துத்துவா கொள்கை வெளிநாட்டு இறக்குமதியாகும்- சத்தீஸ்கர் முதல்வர் தாக்கு
இளம் வீரர்களின் பயிற்சியாளராக இருந்துதான் இந்திய சீனியர் அணியின் பயிற்சியாளர் ஆகியிருக்கிறார் திராவிட், எனவே லஷ்மணுக்கும் அதே வாய்ப்பு கிடைக்கலாம். பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Rahul Dravid, Sourav Ganguly, VVS Laxman