'ப்ளீஸ் ஓய்வு வேண்டாமே' தோனியை கேட்டுக்கொண்ட பிரபல பாடகி

'ப்ளீஸ் ஓய்வு வேண்டாமே' தோனியை கேட்டுக்கொண்ட பிரபல பாடகி
தோனி - லதா மங்கேஷ்கர்
  • News18
  • Last Updated: July 11, 2019, 9:56 PM IST
  • Share this:
ஓய்வு பெறுவதை பற்றி யோசிக்க வேண்டாமென்று தோனிக்கு பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் கோரிக்கை விடுத்துள்ளார்.

உலகக் கோப்பை அரையிறுதி போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியிடம் 18 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோல்வியைடைந்தது. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய தோனி - ஜடேஜா ஜோடி 100 ரன்களை கடந்து அணியை வெற்றி பெற செய்வார்கள் என எதிர்பார்க்கப்ட்டது.

ஆனால் இறுதிக்கட்டத்தில் ஜடேஜா விக்கெட்டை தொடர்ந்து தோனி ரன்அவுட்டாகியதால் இந்திய அணியின் உலகக் கோப்பை கனவு கலைந்தது. உலகக் கோப்பை தொடரிலிருந்து இந்திய அணி வெளியேறியதை தொடர்ந்து மகேந்திர சிங் தோனி விரைவில் ஓய்வு அறிவிக்க உள்ளார் என தகவல்கள் வெளியானது.


இதையடுத்து கிரிக்கெட் பிரபலங்கள், திரை நட்சத்திரங்கள் பலர் தோனி தற்போதைக்கு ஓய்வு அறிவிக்க வேண்டாமென சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில், “வணக்கம் தோனி, நீங்கள் ஓய்வு பெற விரும்புவதாக நான் கேள்விப்பட்டேன். தயவுசெய்து அப்படி செய்யாதீர்கள். இந்திய அணிக்கு நீங்கள் தேவை. ஓய்வு பெறுவதை பற்றி யோசிக்க வேண்டாம் என்று கோரிக்கை விடுக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

First published: July 11, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்