4 பந்துகளில் 4 விக்கெட்... கிரிக்கெட் வரலாற்றில் சாதனை படைத்த மலிங்கா!

சர்வதேச டி20 போட்டிகளில் 100 விக்கெட்களை வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை மலிங்கா படைத்துள்ளார்.

Vijay R | news18-tamil
Updated: September 6, 2019, 9:42 PM IST
4 பந்துகளில் 4 விக்கெட்... கிரிக்கெட் வரலாற்றில் சாதனை படைத்த மலிங்கா!
லஷித் மலிங்கா
Vijay R | news18-tamil
Updated: September 6, 2019, 9:42 PM IST
நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா அடுத்தடுத்த 4 பந்துகளில் 4 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

நியூசிலாந்து - இலங்கை அணிக்கு எதிரான 3வது  டி20 போட்டி இன்று நடைபெற்றது. முதல் 2 டி20 போட்டிகளை வென்று நியூசிலாந்து அணி தொடரை கைப்பற்றியது.

கடைசி டி20 போட்டி டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் மலிங்கா பேட்டிங்கை தேர்வு செய்தார். அதை தொடர்ந்து முதலில் விளையாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் எடுத்தது.


126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு கேப்டன் மலிங்கா மிகப் பெரிய அதிர்ச்சியளித்தார். போட்டியின் 3வது ஓவரை வீசிய மலிங்கா அந்த ஓவரில் தொடர்ந்து 4 விக்கெட்டை வீழ்த்தினார்.



மலிங்கா 3வது ஓவரின் 3வது பந்தில் முன்ரோவை 12 ரன்களில் அவுட்டாக்கினார். அவரை தொடர்ந்து ரூத்தர்ஃபோர்டு, கிராண்ட்ஹோம், டெய்லர் ஆகிய மூவரையும் டக்-அவுட்டாக்கி வெளியேற்றினார்.

இந்த போட்டியில் முதல் விக்கெட்டை வீழ்த்தியன் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் 100 விக்கெட்களை வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். மேலும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக முறை (6) ஹட்ரிக் எடுத்த வீரர் என்ற சாதனையும் மலிங்கா எட்டியுள்ளார்.

Also Watch

First published: September 6, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...